மணிரத்னம் இயக்கத்தில் கடந்த செப்டம்பர் 30-ந் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் பான் இந்தியா படமாக ரிலீசான திரைப்படம் பொன்னியின் செல்வன். அமரர் கல்கி எழுதிய நாவலை அடிப்படையாக வைத்து இப்படத்தை இயக்கி உள்ளார் மணிரத்னம். இப்படத்துக்கு அமோக வரவேற்பு கிடைத்து வந்தது. குறிப்பாக வெளிநாடுகளில் வசூல் சாதனை நிகழ்த்தியது.
கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் ரூ.30 கோடி வசூலை அள்ளிய பொன்னியின் செல்வன் திரைப்படம் நேற்று வசூலில் கடும் சரிவை சந்தித்துள்ளது. இப்படம் நேற்று மொத்தமாக ரூ.5.10 கோடி மட்டுமே வசூலித்துள்ளது. இப்படம் வெளியானதில் இருந்து குறந்த வசூலை அள்ளியது நேற்றைய தினம் தான். இதனால் இப்படம் கமலின் விக்ரம் பட சாதனையை முறியடிக்குமா என்கிற சந்தேகமும் எழுந்துள்ளது.