மாநாடு படத்திற்காக ஒன்று கூடும் நான்கு மாஸ் நடிகர்கள்..!

First Published Feb 2, 2021, 6:39 PM IST

சுசீந்திரன் - சிம்பு கூட்டணியில் பொங்கல் விருந்தாக திரைக்கு வந்துள்ள ‘ஈஸ்வரன்’ திரைப்படம் ரசிகர்களின் ஏகபோக வரவேற்பையும் தாண்டி, குடும்பங்கள் கொண்டாடும் படமாக மாறியுள்ளது. வசூல் மற்றும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 
 

குடும்பம், சென்டிமெண்ட், காமெடி, ஆக்‌ஷன் என அனைத்தும் கலந்த கலவையாக வந்துள்ள இந்த திரைப்படம் நீண்ட நாட்களுக்குப் பிறகு சிம்பு ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.
undefined
சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘மாநாடு’. இதில் அப்துல் காலிக் என்ற பெயரில் முஸ்லிம் இளைஞராக சிம்பு நடித்து வருவதாக படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது.
undefined
இந்தப் படத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், டேனியல் பாலாஜி, மனோஜ், பிரேம்ஜி, உதயா, அரவிந்த் ஆகாஷ், படவா கோபி, அஞ்சனா கீர்த்தி மற்றும் பலர் நடித்து வருகின்றனர். யுவன்சங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.
undefined
சென்னை, ஐதராபாத், பாண்டிச்சேரி என பல இடங்களில் ஷூட்டிங் நடைபெற்று வந்த நிலையில், சமீபத்தின் படத்தின் மோஷன் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி தாறுமாறு வைரலானது.
undefined
“மாநாடு” படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அதில் அப்துல் காலிக் கெட்டப்பில் நடிகர் சிம்பு இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.
undefined
simbu
undefined
click me!