முதியவரை நிர்வாணமாக படமெடுத்து ரூ.11 லட்சம் அபேஸ் பண்ணிய நடிகை! சினிமா பாணியில் ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்

First Published | Aug 1, 2023, 9:37 AM IST

முதியவரை நிர்வாணமாக படமெடுத்து மிரட்டி அவரிடம் பணம் பறித்த நடிகை கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Nithya sasi

மலையாள தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருபவர் நித்யா சசி. 32 வயதாகும் இவர், திருவனந்தபுரத்தில் வசித்து வரும் 75 வயது முதியவரிடம் வாடகைக்கு வீடு கேட்டு போனில் தொடர்பு கொண்டிருக்கிறார். பின்னர் அடிக்கடி இதுதொடர்பாக முதியவரின் வீட்டுக்கும் சென்றுள்ள நித்யா சசி, அவருடன் நெருங்கி பழகி வந்திருக்கிறார். பின்னர் ஒரு நாள் தனது நண்பர் பினு என்பவரையும் முதியவரின் வீட்டுக்கு அழைத்து சென்ற நித்யா, முதியவரை நிர்வாணமாக்கி அவரை தனது செல்போனில் போட்டோ மற்றும் வீடியோ எடுத்துள்ளார்.

Nithya sasi

பின்னர் அந்த வீடியோவை காட்டி மிரட்டி, பணம் கேட்டுள்ளார். பணம் தராவிட்டால் வீடியோவை இணையத்தில் வெளியிட்டு விடுவேன் என நித்யா சசி மிரட்டியதால் பயந்துபோன அந்த முதியவர் முதலில் ரூ.11 லட்சம் பணத்தை கொடுத்திருக்கிறார். அதன்பின்னரும் விடாமல் பின் தொடர்ந்து அடிக்கடி பணம் கேட்டு மிரட்டி இருக்கிறார் நித்யா சசி. அவரின் டார்ச்சர் தாங்க முடியாமல் வேறுவழியின்றி காவல்துறையின் உதவியை நாடி இருக்கிறார் முதியவர்.

இதையும் படியுங்கள்... டிரெண்டிங் ஸ்டார் பகத் பாசிலின் தந்தை தமிழில் இத்தனை ஹிட் படங்களை இயக்கி உள்ளாரா? எல்லாம் தரமான படமா இருக்கே!

Tap to resize

Nithya sasi

போலீஸிடம் நடந்ததை கூறி அவர்கள் மீது ஆக்‌ஷன் எடுக்குமாறு அந்த முதியவர் கேட்டிருக்கிறார். இதையடுத்து களத்தில் இறங்கிய போலீஸ், அந்த நடிகையை சினிமா பாணியில் ஸ்கெட்ச் போட்டு தூக்கி இருக்கிறார்கள். நடிகைக்கு பணம் தருவதாக வரவைக்குமாறு போலீசார் முதியவரிடம் கூறி இருக்கின்றனர். இதையடுத்து முதியவரும் அதேபோல் சொல்ல பணம் பறிக்கும் ஆசையுடன் வந்த நித்யா சசியை, முதியவரின் வீட்டில் மறைந்திருந்த போலீசார் கையும் களவுமாக பிடித்துள்ளனர்.

Nithya sasi

இதையடுத்து நித்யா சசி மற்றும் அவரது நண்பர் பினு இருவரையும் கைது செய்த போலீசார், அவர்கள் இதற்கு முன் இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளார்களா என்பது பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். முதியவரை ஏமாற்றி பணம் பறித்த வழக்கில் சீரியல் நடிகை கைது செய்யப்பட்டு உள்ளது, மலையாள சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கைதான நடிகை நித்யா சசி, ஒரு வழக்கறிஞர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... அப்பா இளையராஜா எழுதிய பாடலை... முதன் முறையாக பாடிய யுவன்சங்கர் ராஜா!

Latest Videos

click me!