டிரெண்டிங் ஸ்டார் பகத் பாசிலின் தந்தை தமிழில் இத்தனை ஹிட் படங்களை இயக்கி உள்ளாரா? எல்லாம் தரமான படமா இருக்கே!

First Published | Aug 1, 2023, 8:47 AM IST

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடித்து கலக்கிக் கொண்டிருக்கும் நடிகர் பகத் பாசிலின் தந்தை இயக்கிய தமிழ் படங்கள் பற்றி பார்க்கலாம்.

fahadh Fazil

இந்தியா முழுவதும் தற்போது மாமன்னன் படம் தான் டிரெண்டிங்கில் உள்ளது. இதற்கு முக்கிய காரணம் அப்படத்தில் வில்லனாக நடித்த பகத் பாசில் தான். மாமன்னன் படம் தியேட்டரில் ரிலீஸ் ஆனபோது கூட இந்த அளவுக்கு கொண்டாடப்படாத பகத் பாசிலின் ரத்னவேலு கேரக்டர், தற்போது ஓடிடியில் வெளியான பின்னர் தாறுமாறாக கொண்டாடப்பட்டு வருகிறது. மாமன்னன் படத்தில் பகத் பாசிலை சாதி வெறி பிடித்த வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க வைத்திருந்தார் மாரி செல்வராஜ்.

fahadh Fazil

படத்தின் கதைப்படி அவர் ஒரு கொடூர வில்லன். ஆனால் தற்போது அவரை ஹீரோவாக சித்தரித்து ஏராளமான மீம்ஸ்கள் போடப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக அவரின் மாஸ் காட்சிகளை ஒன்றிணைத்து அதன் பின்னணியில் பல்வேறு சாதியினர் தங்கள் சாதி பெருமை பேசும் பாடல்களை ஒலிக்கவிட்டு அதனை டிரெண்டாக்கி வருகின்றனர். சொல்லப்போனால் ராஜ ராஜ சோழனுக்கு பின்னர் அனைத்து சாதியினரும் உரிமை கொண்டாடும் ஒரு கேரக்டராக பகத் பாசிலின் ரத்னவேலு கேரக்டர் மாறிவிட்டது.

இப்படி டிரெண்டிங் ஸ்டார் ஆக வலம் வரும் பகத் பாசில் பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும், ஆனால் அவரின் தந்தை ஒரு தரமான இயக்குனர் என்பது பலரும் அறியாத ஒன்று. அதுவும் தமிழில் அவர் பல்வேறு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை இயக்கி உள்ளார் என்பது கூடுதல் சிறப்பு. அவர் இயக்கிய தமிழ் படங்கள் பற்றி தற்போது பார்க்கலாம்.

இதையும் படியுங்கள்... அச்சச்சோ... விபத்தில் சிக்கிய குக் வித் கோமாளி பவித்ரா..! என்ன ஆச்சு? அதிர்ச்சி தகவல்..!

Tap to resize

fahadh Fazil

இயக்குனர் பாசில் தமிழில் முதன்முதலில் இயக்கிய திரைப்படம் பூவே பூச்சூடவா. இப்படம் நடிகை நதியாவின் கெரியரில் மிகப்பெரிய வெற்றியை கொடுத்த படமாகும். அப்படத்திற்கு இளையராஜா இசையமைத்த பாடல்கள் இன்றளவும் கொண்டாடப்பட்டு வருகின்றன. இதையடுத்து சத்யராஜ் நடித்த பூவிழி வாசலிலே மற்றும் என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு ஆகிய இரண்டு படங்களை இயக்கினார் பாசில். இந்த இரண்டு படங்களுமே வெற்றி பெற்றன. குறிப்பாக என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.

Director Fazil

பின்னர் கார்த்திக்கின் வருஷம் 16, பிரபு நடித்த அரங்கேற்ற வேலை, அமலா மற்றும் ஸ்ரீவித்யா நடித்த கற்பூர முல்லை போன்ற படங்களும் பாசில் இயக்கியவை தான். நடிகர் விஜய்யை காதல் நாயகனாக்கிய பெருமையும் இயக்குனர் பாசிலையே சேரும். அவர் இயக்கிய காதலுக்கு மரியாதை படம் விஜய்யின் கெரியரில் ஒரு மாஸ்டர் பீஸ் படமாக திகழ்கிறது. இதையடுத்து விஜய்யை வைத்து பாசில் இயக்கிய கண்ணுக்குள் நிலவு திரைப்படமும் ஹிட் ஆனது. இப்படி தமிழில் குறைந்த அளவிலான படங்களையே இயக்கினாலும் அவை அனைத்தும் வெற்றிப்படங்களாக கொடுத்தவர் தான் பாசில். தமிழில் இவர் கடைசியாக இயக்கிய திரைப்படம் ஸ்ரீகாந்த் நடித்த ஒரு நாள் ஒரு கனவு. இப்படம் கடந்த 2005-ம் ஆண்டு ரிலீஸ் ஆனது. அதன்பின் அவர் தமிழில் படங்கள் எதுவும் இயக்கவில்லை.

இதையும் படியுங்கள்... பிக்பாஸ் கவினுக்கு டும் டும் டும்..! மணமகள் யார்? திருமண தேதி குறித்து வெளியான தகவல்!

Latest Videos

click me!