Salim Kumar: பிரபல மலையாள நடிகர் சலீம் குமார் 56 வயதில் திடீரென மரணம் அடைந்துள்ளார். அவரது இறப்புக்கு காரணம் என்ன? என்னெனன் தமிழ் படங்களில் நடித்துள்ளார்? என்பது குறித்து பார்ப்போம்.
பிரபல மலையாள நடிகரும், தேசிய விருது பெற்றவருமான சலீம் குமார் காலமானார். அவருக்கு வயது 56. உடல்நலக்குறைவு காரணமாக கொச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்துள்ளது. நிமோனியா பாதிப்புக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது, திடீரென மாரடைப்பு ஏற்பட்டதே மரணத்திற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
25
ரசிகர்களை குலுங்க குலுங்க சிரிக்க வைத்த சலீம் குமார்
கேரள முதல்வர் வி.டி. சதீசனின் பரவூர் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டதுதான் சலீம் குமாரின் கடைசி பொது நிகழ்ச்சி ஆகும். மிமிக்ரி மற்றும் காமெடி மூலம் சினிமாவுக்குள் நுழைந்தவர் சலீம் குமார். 1990-களின் மத்தியில் நடிக்க வந்தாலும், 2000-ம் ஆண்டுக்குப் பிறகு வெளியான படங்களில் இவரது காமெடி கதாபாத்திரங்கள் மலையாள ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தன. காமெடி நடிகர் என்ற வட்டத்தைத் தாண்டி, பல சீரியஸான கதாபாத்திரங்களிலும் நடித்து தனது நடிப்புத் திறமையை நிரூபித்தார். இவரது பல 'தக் லைஃப்' வசனங்கள் இன்றும் மீம்ஸ்களில் கொண்டாடப்பட்டு வருகின்றன.
35
நடிகர்; இயக்குநர்
சலீம் குமார், 1969 அக்டோபர் 9-ம் தேதி வடக்கன் பரவூரில் பிறந்தார். கொச்சின் கலாபவன், சாகர் போன்ற மிமிக்ரி குழுக்களில் தீவிரமாக செயல்பட்டார். அவரது நெருங்கிய நண்பரான நாதிர்ஷாதான் அவரை சினிமாவுக்கு அழைத்து வந்தார். 'இஷ்டமாண் நூறுவட்டம்' அவரது முதல் படம். 2000-ல் வெளியான 'தென்காசிப்பட்டணம்' படம் சூப்பர்ஹிட் ஆனதால் சலீம் குமார் மலையாள சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகரானார். அவர் 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும், 'கம்பார்ட்மென்ட்', 'கருத்த ஜூதன்', 'தெய்வமே கை தொழாம் கே.குமாராக்கணம்' ஆகிய மூன்று படங்களையும் இயக்கியுள்ளார்.
சலீம் குமார், 2005-ல் 'அச்சனுறங்காத வீடு' படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான மாநில விருதை வென்றார். 2010-ல் 'ஆதாமிண்டே மகன் அபு' படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும், மாநில விருதையும் ஒருங்கே பெற்றார். 2013ல் 'அயாளும் நானும் தம்மில்' படத்திற்காக சிறந்த நகைச்சுவை நடிகருக்கான மாநில விருதையும் வென்றுள்ளார்.
சலீம் குமார் சில நேரடி தமிழ படங்களிலும் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ளார். மலையாளத்தில் சலீம் குமார் நடித்து சூப்பர்ஹிட் ஆன 'தென்காசிப்பட்டணம்' திரைப்படம் தமிழிலும் அதே பெயரில் 2002ஆம் ஆண்டு வெளியானது. சரத்குமார், நெப்போலியன் நடித்த இந்த படத்தில் மலையாளத்தில் தான் நடித்த அதே 'நெருப்பு' கதாபாத்திரத்தை தமிழிலும் சலீம் குமார் நடித்திருந்தார்.
கடந்த 2013ல் பரத் பாலா இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான மரியான் திரைப்படத்தில் மிக முக்கியமான குணச்சித்திர கதாபாத்திரத்தில் சலீம் குமார் நடித்து பலரின் பாராட்டுகளையும் பெற்றார். கடந்த 2014ல் ஆரி மற்றும் ஷிவதா நடிப்பில் வெளியான நெடுஞ்சாலை திரைப்படத்தில் 'மாட்டுச் சேகர்' என்ற நகைச்சுவை கலந்த வில்லன் கதாபாத்திரத்தில் சலீம் குமார் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
55
போலி சிகிச்சை; வெளிப்படையான குற்றச்சாட்டு
கடந்த சில ஆண்டுகளாக கல்லீரல் சம்பந்தமான நோய்களால் அவர் உடல்நலப் பிரச்சினைகளை சந்தித்து வந்தார். தனக்கு வந்த லிவர் சிரோசிஸ் மதுப்பழக்கத்தால் வரவில்லை என்றும், அது பரம்பரையாக வந்த நோய் என்றும் அவர் முன்பே தெரிவித்திருந்தார். நோய்வாய்ப்பட்டிருந்தபோது போலி சிகிச்சைகளை நாடியதால் தனது உடல்நிலை மேலும் மோசமடைந்ததையும் அவர் வெளிப்படையாகப் பகிர்ந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.