சம்பளமே இல்லாமல் பண்ணையில் குதிரை, ஆடுகளை பார்த்துக் கொள்ளும் மோகன்லாலின் மகன் பிரணவ்!

First Published | Dec 25, 2024, 6:07 PM IST

Pranav Mohanlal is working on a farm in Spain : நடிகர் மோகன் லாலின் மகன் பிரணவ் சம்பளமே இல்லாமல் வேலை பார்த்து வரும் செய்தி குறித்து இந்த தொகுப்பில் நாம் காணலாம்.

Pranav Mohanlal is working on a farm in Spain

Pranav Mohanlal is working on a farm in Spain : மலையாளத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் மோகன் லால். இவர், தன்னுடைய 18 வயது முதல் சினிமாவில் நடித்து வருகிறார். இதுவரையில் மோகன் லால் 355க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மலையாளம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். முதல் படத்திலேயே வில்லனாக நடித்தார். சினிமாவின் ஆரம்ப காலகட்டங்களில் வருடத்திற்கு 30 படங்களில் கூட நடித்து பிஸியான நடிகராக வலம் வந்தார். இப்போது ஓரிரு படங்களில் நடித்து வருகிறார்.

Mohanlal Daughter Vismaya Mohanlal, Mohanlal Wife Suchitra

ஒரு நடிகராக இருந்த மோகன் லால் இப்போது இயக்குநராகவும் அவதாரம் எடுத்துள்ளார். பரோஸ் படத்தின் மூலமாக இயக்குநராக அவதாரம் எடுத்த மோகன் லாலுக்கு நடிகர் மம்மூட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார். கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு மோகன் லாலின் பரோஸ் படம் இன்று திரைக்கு வந்துள்ளது. இந்தப் படத்தின் பட்ஜெட் ரூ.200 கோடி. ஃபேண்டஸி கதையில் இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.

Tap to resize

Mohanlal Family Details, Mohanlal Son Pranav

மோகன் லால் சினிமாவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக சாதனை படைத்து வருகிறார். ஒரு நடிகராக மோகன் லால் பற்றி அனைவரும் அறிந்த ஒன்று தான். ஆனால், அவரது குடும்பத்தைப் பற்றி யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. கடந்த 1988 ஆம் ஆண்டு ஏப்ரல் 28 ஆம் தேதி மோகன் லாலுக்கும் சுசித்ராவுக்கும் திருமணம் நடந்தது. இது மோகன் லாலுக்கு காதல் திருமணம் தான். இதையடுத்து மோகன் லாலுக்கு பிரணவ் என்ற மகனும், விஸ்மயா என்ற மகளும் பிறந்தனர்.

Pranav Mohanlal Working in a Spain

இதில் இருவருமே சினிமாவில் கால் பதித்தனர். பிரணவ் மோகன் லால் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ஹீரோவாகவும் பல படங்களில் நடித்துள்ளார். ஒரு சில படங்களில் அசிஸ்டண்ட் இயக்குநராகவும் இருந்துள்ளார். கடந்த 2022 ஆம் ஆண்டு ஹிருதயம் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த ஆண்டில் வர்ஷங்களுக்கு ஷேஷம் என்ற படத்தில் நடித்துள்ளார்.

Pranav Mohanlal, Mohanlal Filmography, Pranav Mohanlal Movies

இதற்கிடையில் பிரணவ் ஸ்பெயின் நாட்டில் உள்ள பண்ணை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இதற்கு அவர் சம்பளம் ஏதும் வாங்கவில்லையாம். தங்குவதற்கு இடம் மற்றும் உணவு மட்டும் பெற்றுக் கொண்டு சம்பளம் இல்லாமல் வேலை பார்த்து வருகிறார். அதோடு குதிரை மற்றும் ஆடுகளை கவனித்துக் கொள்வாராம். இதே போன்று தான் மோகன் லாலின் மகள் விஸ்மயா உதவி இயக்குநராகவும் எழுத்தாளராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!