கேரளாவில் இருந்து கோலிவுட் வந்து பேமஸ் ஆன நடிகைகளில் மாளவிகா மோகனனும் ஒருவர். இவர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ரஜினியின் பேட்ட திரைப்படத்தில் நடிகர் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார். பேட்ட படத்தின் வெற்றிக்கு பின்னர் மாளவிகாவுக்கு கிடைத்த ஜாக்பாட் வாய்ப்பு தான் நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படம்.
25
Actress malavika mohanan
லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படத்தில் தளபதிக்கு ஜோடியாக நடித்திருந்தார் மாளவிகா. மாஸ்டர் படமும் ஹிட்டானதால் கோலிவுட்டில் நட்சத்திர நாயகியாக வலம் வந்தார் மாளவிகா. இதையடுத்து தனுஷுக்கு ஜோடியாக மாறன் படத்தில் நடித்த அவர், தற்போது பா.இரஞ்சித் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் தங்கலான் படத்தில் நடித்துள்ளார்.
தங்கலான் திரைப்படத்தில் ஆராத்தி என்கிற கேரக்டரில் நடித்துள்ளார் மாளவிகா. இந்த கதாபாத்திரத்திற்காக உடல் எடையை குறைத்ததோடு, சிலம்பமும் கற்று நடித்திருக்கிறார் மாளவிகா மோகனன். தங்கலான் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 15ந் தேதி சுதந்திர விடுமுறையில் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது.
45
malavika mohanan Photos
தங்கலான் படம் தவிர நடிகை மாளவிகா மோகனன் கைவசம் தமிழில் சர்தார் 2 படமும் உள்ளது. இப்படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடிக்கிறார் மாளவிகா. இதுதவிர தெலுங்கில் பிரபாஸுக்கு ஜோடியாக ராஜாசாப் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இது பான் இந்தியா படமாக உருவாகிறது.
55
malavika mohanan Latest Photoshoot
இப்படி பான் இந்தியா அளவில் பிசியான நடிகையாக வலம் வரும் அவர், இன்ஸ்டாவிலும் அடிக்கடி தன்னுடைய போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது தங்கலான் புரமோஷனின் போது டார்க் ரெட் கலர் சேலையில் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ் அள்ளுகிறது.