மனைவி குறித்த கேள்விக்கு..உண்மையை வெளிப்படையாக போட்டுடைத்த மகேஷ் பாபு..

Kanmani P   | Asianet News
Published : May 12, 2022, 01:34 PM IST

சமீபத்திய இன்ஸ்டாகிராம் live-in மூலம் ரசிகர்களை சந்தித்த மகேஷ் பாபு தனது மனைவி குறித்த சுவாரசியமான தகவல்களை கூறியுள்ளார்.

PREV
18
மனைவி குறித்த கேள்விக்கு..உண்மையை வெளிப்படையாக போட்டுடைத்த மகேஷ் பாபு..
mahesh babu

டோலிவுட் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு  சமீபத்தில் அனில் ரவிபுடி இயக்கிய 'சரிலேரு நிகேவ்வரு' படத்தை தொடர்ந்து  இயக்குனர் பருசுராம் பெட்லாவின் க இயக்கத்தில்  மாஸ் மற்றும் ஆக்ஷன் திரைப்படமான   'சர்காரு வாரிபாட்டா ' படத்தில் நடித்துள்ளார்.  

28
MAHESH BABU

இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் சமுத்திரக்கனி, வெண்ணெல கிஷோர் மற்றும்ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். 

38
MAHESH BABU

விரைவில் வெளியாகவுள்ள இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ், 14 ரீல்ஸ் பிளஸ் மற்றும் மகேஷ் பாபு என்டர்டெயின்மென்ட் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

48
MAHESH BABU

இந்த படத்திலிருந்து  முன்னதாக வெளியான சித் ஸ்ரீராம் பாடியிருந்த 'கலாவதி' பாடல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இதிலிருந்து சமீபத்தில் வெளியாகிய ட்ரைலர் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது.  இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து ப்ரோமோஷன் வேலைகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. 

 

58
MAHESH BABU

இந்த படத்தின் ப்ரோமோஷன் வேலைகளுக்காக சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த மகேஷ் பாபு, பான் இந்தியா படங்களில் நடிக்க விருப்பமில்லை என கூறி அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளனர்.

68
MAHESH BABU

இதையடுத்து சமீபத்தில் இன்ஸ்ட்டா லைவ் மூலம் ரசிகர்களை சந்தித்த மகேஷ் பாபு, சர்காரு வாரி பாட்டா படத்தின் " Penny " பாடலில் ஆடிய அவரது மகளை குறிப்பிட்டு எப்போது அவர் சினிமாவில் நடிக்க வருவார் என கேட்க அதற்கு சற்றும் யோசிக்காமல் " அவர் ஏற்கனவே நடிகை தான்" என பதில் தந்தார்.

78
MAHESH BABU

பின்னர் உங்கள் மனைவியின் எந்த குணம் பிடிக்கும் என ரசிகர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த மகேஷ் பாபு,  அவரின் அனைத்து குணங்களும் பிடிக்கும். அதனால்தான் அவரை திருமணம் செய்து கொண்டேன் என சொல்லியபடியே புன் சிரிப்பை வெளியிட்டார்.

88
MAHESH BABU

பின்னர்  உங்கள் நெருங்கிய நண்பர் யார் என்ற கேள்விக்கும் " அதுவும் எனது மனைவியே என பதில் அளித்துள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories