அந்த வகையில், நடிகர் மாதவன் நடித்த "எவனோ ஒருவன்" படத்தை இயக்கிய இயக்குனர்,உடல் நல குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்று வெளியான தகவல் தற்போது வதந்தி என தெரியவந்துள்ளது..
தென்னிந்திய மொழிகளில் பல படங்களை இயக்கியுள்ள பிரபல இயக்குனர் நிஷிகாந்த் காமத் கல்லீரல் பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருடைய உடல் நிலை கவலை கிடமாக உள்ளதாக கடந்த வாரம் மருத்துவமனை தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது.
எனினும் ஹைதராபாத்தில் உள்ள பிரபல தனியார் மருத்துவமணையில் ஐ.சி.யூ பிரிவில், இவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 50 வயதாகும், நிஷிகாந்த் காமத், தமிழில் மாதவன் நடித்த ’எவனோ ஒருவன்’ என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம், கோலிவுட் திரையுலகிலும் பிரபலமானவர்.
மேலும் மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற திருஷ்யம், படத்தை ஹிந்தியில் அஜய் தேவ்கன், ஸ்ரேயா நடிப்பில் ரீமேக் செய்தார். தமிழில் இந்த படம் கமல் நடிப்பில் பாபநாசம் என்கிற பெயரில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றாலும், இந்தியில் பெரிய அளவில் வெற்றிபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இவருடைய உடல் நிலை விரைவில் நலம் பெற வேண்டும் என, குடும்பத்தினர்,ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களுடைய பிராத்தனைகளை முன்வைத்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நிஷிகாந்த் காமத்உயிரிழந்தார் என்று வெளியான தகவல் தற்போது வதந்தி என தெரியவந்துள்ளது.இதனை பிரபல நடிகர் ரிதேஷ் தேஷ்முக் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெளிவு படுத்தியுள்ளார்.இந்த தகவல் வதந்தி என தெரிய வந்தபின் இவருடைய ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.