ரஜினி - கமல் இணைவு எப்போது?... இளம் இயக்குநர் சொன்ன பதிலால் வெளியான உண்மை...!

Published : Aug 17, 2020, 12:41 PM IST

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல் ஹாசன் இணைய உள்ள படம் குறித்து அந்த படத்தின் இயக்குநரான லோகேஷ் கனகராஜ் கூறியுள்ள பதில் அனைவரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

PREV
19
ரஜினி - கமல் இணைவு எப்போது?... இளம் இயக்குநர் சொன்ன பதிலால் வெளியான உண்மை...!

சினிமா உலகில் அடியெடுத்த வைத்த காலத்தில் ரஜினிகாந்த் - கமல் ஹாசன் ஒன்றாக இணைந்து பல படங்களில் நடித்துள்ளார்கள். ஆனால் ஒரு காலகட்டத்திற்கு பிறகு, அதாவது தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஒளிர ஆரம்பித்த பிறகு இருவரையும் ஒரே படத்தில் இணைப்பது என்பது சாத்தியமில்லாத காரியமாக மாறிப்போனது. 

29

தனது 65வது பிறந்தநாளை விமரிசையாக கொண்டாடி முடித்த கமல் ஹாசனுக்கு மீண்டும் ரஜினியுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. அதனால் அதற்கான முயற்சிகளில் இறங்கினார். 

39

அப்போது இருவரும் சினிமாவை தாண்டி அரசியலில் அதிகமாக கவனம் செலுத்தி வந்தனர். அதனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து ஒரு மாஸ் படத்தை தயாரிக்க வேண்டுமென முடிவு கமல் முடிவு செய்தார். 

49

விஜய் நடிப்பில் “மாஸ்டர்” படத்தை இயக்கி வரும் லோகேஷ் கனகராஜ் சூப்பர் ஸ்டாரின் அடுத்த படத்தை இயக்க உள்ளதாகவும்,  அதை கமல் ஹாசனின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் தயாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. 

59

முதலில் கமல் ஹாசனுக்காக வடிவமைக்கப்பட்ட இந்த கதையில் ரஜினிகாந்த் நடித்தால் நன்றாக இருக்கும் என உலக நாயகன் தான் முடிவு செய்தார். 

69

நான் நடிக்காவிட்டாலும் ரஜினி நடிக்க ஒப்புக்கொண்டால் அந்த படத்தை நானே தயாரிக்கிறேன் என்று கூறியுள்ளார். இதையடுத்து லோகேஷ் கனகராஜ் சொன்ன கதை பிடித்து போக, ரஜினிகாந்த் நடிக்க ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. 

79

இந்நிலையில் ஒருவரும் அடுத்தடுத்து அரசியல் மற்றும் பட வேலைகளில் பிசியாக இருப்பதால் இந்த படத்தை கைவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதனால் சோகத்தில் இருந்த ரஜினி, கமல் ரசிகர்களை நல்ல செய்தி சொல்லி குஷியாக்கியுள்ளார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.

89

ரஜினி - கமல் இணைய உள்ள படத்தின் நிலை குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த லோகேஷ் கனகராஜ், “தற்போது அந்த படம் குறித்து நான் எதுவும் சொல்ல முடியாது. தயாரிப்பு நிறுவனம் தான் இதுகுறித்த முடிவை எடுக்க வேண்டும். அனைத்து ஒப்பந்தங்களும் கையெழுத்தான பிறகு அவர்கள் தான் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள்" என கூறியுள்ளார். 

99

இதனால் ரஜினிகாந்த் - கமல் ஹாசன் இணைந்து நடிக்க உள்ள புதிய படம் ட்ராப் செய்யப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு நவம்பர் மாதத்தில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. 

click me!

Recommended Stories