2006ம் ஆண்டு ஃபெமினா மிஸ் வேல்ர்டு இந்தியா பட்டம் வென்றவர் நடாஷா சூரி. இந்தியாவின் சூப்பர் மாடல்களில் இவரும் ஒருவர்.
2016ம் ஆண்டு வெளியான கிங் லையர் என்ற மலையாளப் படம் மூலமாக திரையுலகில் அறிமுகமானார். மேலும் சில இந்தி படங்களில் நடித்துள்ளார்.
கரண் சிங், பிபாசா பாசுவுடன் நடாஷா சூரி நடித்த டேஞ்சர்ஸ் வெப் சீரிஸ் கடந்த 14ம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்நிலையில் நடாஷா சூரிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்து அவரே இதுகுறித்து தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
'கடந்த 6 நாட்களுக்கு முன்பு ஒரு அவசர வேலையின் காரணமாக புனே சென்றேன். பிறகு திரும்பி வந்த போது, எனக்கு காய்ச்சல், தொண்டை கரகரப்பு, சோர்வு ஏற்பட்டது. மூன்று நாட்களுக்கு முன்பு டெஸ்ட் செய்த போது எனக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. நான் தற்போது வீட்டில் தனிமைபடுத்தப்பட்டு இருக்கிறேன். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மருந்துகள் எடுத்துக்கொள்கிறேன். என்னுடன் வசிக்கும் பாட்டி மற்றும் சகோதரி தற்போது கொரோனா டெஸ்ட் எடுத்துள்ளனர்'' என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அவருடைய தங்கையான ரூபாலி சூரிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ரூபாலி சூரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கொரோனாவில் இருந்து மீண்டு வரும் பயணத்தில் என்னுடன் இரு. இணைந்தே வலிமையாக இருப்போம். கொரோனா பாசிட்டிவ் மற்றும் மனதும் பாசிட்டிவ் என்று பதிவிட்டுள்ளார். அக்கா, தங்கை இருவரும் பூரண நலம் பெற வேண்டுமென ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.