சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் செப்டம்பர் 5ந் தேதி ரிலீஸ் ஆகும் நிலையில், அதற்கு போட்டியாக என்னென்ன படங்கள் தியேட்டர் மற்றும் ஓடிடியில் ரிலீஸ் ஆகிறது என்பதை பார்க்கலாம்.
செப்டம்பர் 5-ந் தேதி நான்கு தமிழ் படங்கள் ரிலீஸ் ஆகிறது. அதில் ஒன்று சிவகார்த்திகேயனின் மதராஸி. இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி உள்ளார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கன்னட நடிகை ருக்மிணி வசந்த் நடித்துள்ளார். மேலும் வித்யூத் ஜம்வால் இப்படத்தில் வில்லனாக மிரட்டி இருக்கிறார். இப்படத்தை ஸ்ரீ லட்சுமி மூவீஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
காந்தி கண்ணாடி
விஜய் டிவி நிகழ்ச்சிகளில் காமெடியனாக கலக்கிய பாலா, முதன்முறையாக ஹீரோவாக நடித்துள்ள படம் காந்தி கண்ணாடி. இப்படத்தை ஷெரிஃப் இயக்கி உள்ளார். இப்படத்தில் நடிகர் பாலாவுக்கு ஜோடியாக நமீதா கிருஷ்ணமூர்த்தி நடித்துள்ளார். மேலும் பாலாஜி சக்திவேல் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படத்திற்காக 50 கிலோவாக இருந்த தன்னுடைய உடல் எடையை 75 கிலோவாக அதிகரித்து நடித்திருக்கிறார். இப்படமும் செப்டம்பர் 5ந் தேதி திரைக்கு வர உள்ளது.
26
Ghaati
நடிகை அனுஷ்கா ஷெட்டி கதையின் நாயகியாக நடித்துள்ள Ghaati திரைப்படமும் செப்டம்பர் 5-ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தை கிரீஷ் இயக்கி உள்ளார். இப்படத்தில் அனுஷ்கா ஷெட்டி உடன் விக்ரம் பிரபுவும் நடித்துள்ளார். ராஜீவ் ரெட்டி மற்றும் சாய் பாபு இணைந்து இப்படத்தை தயாரித்து உள்ளனர்.
Bad Girl
வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள படம் Bad Girl. இப்படத்தை வர்ஷா என்பவர் இயக்கி இருக்கிறார். இப்படமும் வருகிற செப்டம்பர் 5-ந் தேதி திரைக்கு வர உள்ளது.
36
ஓடிடி ரிலீஸ் படங்கள் & வெப் சீரிஸ்
ஆங்கோன் கி குஸ்தாகியான் (Zee5)
சஞ்சய் கபூரின் மகள் ஷனாயா கபூர் நடித்த இந்தப் படம் திரையரங்குகளில் பெரிய வரவேற்பைப் பெறவில்லை. இப்போது டிஜிட்டல் பிரீமியராக செப்டம்பர் 5 அன்று ரசிகர்களைச் சந்திக்க உள்ளது. விக்ராந்த் மாஸே இதில் மற்றொரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
கமட்டம் (Zee5)
கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய திருச்சூர் கூட்டுறவு வங்கி மோசடிகளை மையமாகக் கொண்ட ஆறு எபிசோட் த்ரில்லர் தொடர் இது. குற்றம், அரசியல், மனிதாபிமானம் ஆகியவற்றைக் கலந்து இந்தத் தொடர் ஓணம் பண்டிகையை முன்னிட்டு செப்டம்பர் 1 முதல் ஒளிபரப்பாகி வருகிறது.
மனோஜ் பாஜ்பாய் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்தக் குற்றத் த்ரில்லர் செப்டம்பர் 5 அன்று நெட்ஃபிளிக்ஸில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ளது. ஜிம் சர்ப், சீரியல் கில்லர் கார்ல் போஜ்ராஜ் வேடத்தில் நடிக்கிறார். உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கதை மும்பையைப் பின்னணியாகக் கொண்டது.
56
ரைஸ் அண்ட் ஃபால் (Prime Video)
16 பிரபலங்களுடன் உருவாகும் இந்த ரியாலிட்டி நிகழ்ச்சி, அதிகாரம் உள்ளவர்கள் மற்றும் பலவீனமானவர்கள் இடையேயான வேறுபாடுகளைக் காட்டும் ஒரு சமூகப் பரிசோதனையாக இருக்கும். அஷ்னீர் க்ரோவர் தொகுப்பாளராகவும், அர்ஜுன் பிஜ்லானி, தனஸ்ரீ வர்மா, கிகு ஷர்தா, குப்ரா சைட் மற்றும் பலர் இதில் பங்கேற்கின்றனர்.
66
Jio HotStar
பீஸ்மேக்கர் (JioHotstar)
ஜான் சீனா நடிக்கும் இந்தத் தொடரின் புதிய எபிசோட் செப்டம்பர் 5 அன்று ஒளிபரப்பாக உள்ளது. இது DCEU-ன் கீழ் உருவாக்கப்பட்டது.
பேக் டூ தி பிரெண்டியர் (JioHotstar)
குடும்பங்கள் 21 ஆம் நூற்றாண்டை விட்டுவிட்டு 1800 களின் வாழ்க்கை முறையில் எப்படி வாழ்கிறார்கள் என்பதைக் காட்டும் இந்த ரியாலிட்டி நிகழ்ச்சி செப்டம்பர் 1 அன்று வெளியிடப்பட்டது.
எ மைன்கிராஃப்ட் திரைப்படம் (JioHotstar)
உலகளவில் பிளாக்பஸ்டராக அமைந்த இந்த ஹாலிவுட் திரைப்படம், கற்பனை மற்றும் நகைச்சுவை கலந்தது. குடும்பப் பார்வையாளர்களுக்கு ஏற்ற இந்தப் படம் செப்டம்பர் 4 அன்று ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.