சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான புதிய படம் மதராஸி. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இப்படம் கடந்த செப்டம்பர் 5ந் தேதி திரைக்கு வந்தது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மிணி வசந்த் நடித்துள்ளார். மேலும் மலையாள நடிகர் பிஜு மேனனும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஸ்ரீ லட்சுமி மூவிஸ் தயாரிக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயன் உடன் வித்யுத் ஜமால், ஷபீர் கல்லரக்கல், விக்ராந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
24
வரவேற்பை பெறும் மதராஸி
மதராஸி திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். ஒளிப்பதிவு பணிகளை சுதீப் இளமன் மேற்கொண்டுள்ளார். படத்தொகுப்பாளராக ஸ்ரீகர் பிரசாத் பணியாற்றியுள்ள இப்படத்தில் ஹைலைட்டாக பேசப்படுவதே சண்டைக் காட்சிகள் தான். அந்த காட்சிகள் ஹாலிவுட் ரேஞ்சுக்கு தரமாக இருக்க முக்கிய காரணம் கெவின் மற்றும் திலீப் சுப்பராயன் தான். அப்படத்தில் டிரக் ஒரே நேரத்தில் 8 கார்களை அடிச்சு தூக்கும் காட்சி பிரம்மிப்பாக இருக்கும் அந்த காட்சிகளை உருவாக்கியவர் கெவின் தான்.
34
உலகளாவிய வசூல்
மதராஸி திரைப்படம் ரிலீஸ் ஆன முதல் நாளில் இருந்தே பாசிடிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. இதனால் படத்தின் வசூலும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருந்தது. அதன்படி இப்படம் ரிலீஸ் ஆன முதல் மூன்று நாட்களில் உலகளவில் ரூ.63 கோடி வசூலித்து இருந்தது. வார இறுதி நாட்களில் வசூலில் கலக்கி வந்த மதராஸி திரைப்படம் வார நாட்களில் வசூலில் மந்தமாகி இருக்கிறது. அதன்படி மதராஸி திரைப்படத்தின் நான்காம் நாள் வசூல் கடும் சரிவை சந்தித்து இருக்கிறது.
அதன்படி அப்படம் நான்காம் நாளில் வெறும் ரூ.4.15 கோடி தான் வசூலித்து இருக்கிறது. இதில் தமிழ்நாட்டில் மட்டுமே இப்படம் ரூ.3 கோடி வசூலித்துள்ளது. இதன்மூலம் மதராஸி திரைப்படம் நான்கு நாட்களில் உலகளவில் ரூ.67 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த வார இறுதியில் இப்படத்தின் வசூல் பிக் அப் ஆனால் மட்டுமே மதராஸி திரைப்படத்தின் 100 கோடி வசூல் கனவு நனவாகும். அதுவும் இந்த வாரம் 10 புதுப் படங்கள் ரிலீஸ் ஆவதால், அதையெல்லாம் மீறி மதராஸி வசூலில் ஜொலிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.