சோசியல் மீடியாவில் தற்போது ஹாட் டாப்பிக் ஆக உள்ளது மாதம்பட்டி ரங்கராஜின் இரண்டாவது திருமணம் தான். அந்த புகைப்படம் வெளியானதால் அவர் கடும் அப்செட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.
கோவை அருகே உள்ள மாதம்பட்டியை சேர்ந்தவர் ரங்கராஜ். இவர் தமிழில் மெஹந்தி சர்க்கஸ் படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இதையடுத்து பெண்குயின் படத்திலும் நடித்திருந்தார். சினிமாவில் நடித்தாலும் இவரை பிரபலமாக்கியது இவரது சமையல் தான். இவரின் சமையலுக்கு கோலிவுட்டே அடிமை என்று சொல்லலாம். அந்த அளவுக்கு தமிழ்நாட்டில் எந்த ஒரு முக்கிய பிரபலத்தின் வீட்டு விசேஷமாக இருந்தாலும் அதில் மாதம்பட்டி ரங்கராஜின் சமையல் இருக்கும். சென்னை முதல் டெல்லி வரை இவரது சமையலுக்கு தனி ரசிகர் கூட்டமே உள்ளது. இவர் தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராகவும் இருந்து வருகிறார்.
24
மாதம்பட்டி ரங்கராஜ் 2-வது திருமணம்
மாதம்பட்டி ரங்கராஜுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவரது முதல் மனைவி பெயர் ஸ்ருதி. அவர் ஒரு வழக்கறிஞர். இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மாதம்பட்டி ரங்கராஜின் ஸ்டைலிஷ்ட் ஆன ஜாய் கிரிசல்டா, தான் மாதம்பட்டி ரங்கராஜின் மனைவி என குறிப்பிட்டு அவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தானும் மாதம்பட்டி ரங்கராஜும் மாலையும், கழுத்துமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு தாங்கள் திருமணம் செய்துகொண்டதாக பதிவிட்டார்.
34
6 மாதம் கர்ப்பம்
சனிக்கிழமை திருமணம் குறித்து பதிவிட்ட ஜாய் கிரிசல்டா, நேற்று தான் 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும், தனக்கும் மாதம்பட்டி ரங்கராஜுக்கும் இந்த ஆண்டு குழந்தை பிறக்க உள்ளது என்றும் குறிப்பிட்டு ஒரு பதிவை போட்டிருந்தார். இதைப்பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகிப்போயினர். அவரின் முதல் மனைவியும் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் தான் மாதம்பட்டி ரங்கராஜின் மனைவி என்று தான் குறிப்பிட்டிருக்கிறார். இதனால் கன்பியூஸ் ஆன ரசிகர்கள். மாதம்பட்டி ரங்கராஜ், தன்னுடைய முதல் மனைவியிடம் விவாகரத்து பெறாமலேயே ஜாய் கிரிசில்டாவை திருமணம் செய்துகொண்டாரா என்கிற கேள்வியை எழுப்பி வருகின்றனர்.
மாதம்பட்டி ரங்கராஜை திருமணம் செய்து கொண்டதாக ஜாய் கிரிசில்டா வெளியிட்டது பழைய புகைப்படமா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. ஏனெனில் இது ஆடி மாதம் என்பதால் அதில் திருமணம் செய்துகொள்ளமாட்டார்கள். அதனால் மாதம்பட்டி ரங்கராஜும் ஜாய் கிரிசில்டாவும் பல மாதங்களுக்கு முன்னரே திருமணம் செய்திருக்கக் கூடும் என கூறப்படுகிறது. தற்போது போட்டோவை லீக் பண்ணியதால் ஜாய் மீது மாதம்பட்டி ரங்கராஜ் செம அப்செட்டில் இருப்பதாகவும் பேச்சு அடிபடுகிறது. ஒருவேளை மாதம்பட்டி ரங்கராஜை பிளாக் மெயில் செய்வதற்காக ஜாய் கிரிசில்டா இதுபோன்று புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினாரா என்கிற கேள்வியையும் நெட்டிசன்கள் எழுப்பி வருகிறார்கள்.