ஜாய் கிரிசில்டா கொடுத்த புகாரின் பேரில் மகளிர் ஆணையம் நடத்திய விசாரணையில் மாதம்பட்டி ரங்கராஜ் என்ன சொல்லி உள்ளார் என்பதைப் பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
Madhampatty Rangaraj in Womens Commission investigation
மாதம்பட்டி ரங்கராஜிடம் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றி வந்த ஜாய் கிரிசில்டா, அவர் தன்னை திருமணம் செய்துவிட்டு ஏமாற்றியதாக பரபரப்பு புகார் தெரிவித்தார். இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கணவன், மனைவியாக வாழ்ந்து வந்திருக்கிறார்கள். இந்த இரண்டு ஆண்டுகளில் நான்கு முறை கர்ப்பமான ஜாய் கிரிசில்டா, 3 முறை அபாஷன் செய்துவிட்டாராம். இதையடுத்து இந்த ஆண்டு நான்காவது முறை கர்ப்பமாகி, அதையும் அபாஷன் செய்ய முயல அப்படி செய்தால் உயிருக்கே ஆபத்து வந்துவிடும் என டாக்டர்கள் எச்சரித்ததை அடுத்து அந்த முடிவை கைவிட்டிருக்கிறார்கள்.
24
ஏமாற்றிய மாதம்பட்டி ரங்கராஜ்
ஜாய் கிரிசில்டா கர்ப்பமான பின்னர் அவரை கழட்டிவிட்டு எஸ்கேப் ஆகி இருக்கிறார் மாதம்பட்டி ரங்கராஜ். இதனால் வேறுவழியின்றி இத்தனை நாட்களாக மூடி மறைத்த உண்மையை ஒவ்வொன்றாக வெளியிடத் தொடங்கினார் ஜாய் கிரிசில்டா. இருவரும் திருமணம் செய்துகொண்டபோது எடுத்த புகைப்படங்கள், தாங்கள் இருவரும் காதலிக்கும்போது எடுத்த புகைப்படங்கள் என ஒவ்வொன்றாக வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்தார் மாதம்பட்டி ரங்கராஜ். தன்னைப்பற்றி ஜாய் கிரிசில்டா பதிவுகள் வெளியிட தடை கோரி மாதம்பட்டி ரங்கராஜ், நீதிமன்றத்தை நாடினார். அதிலும் ஜாய் கிரிசில்டாவுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது.
34
மகளிர் ஆணையத்தில் புகாரளித்த ஜாய்
இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக மாநில மகளிர் ஆணையத்தில் புகார் அளித்தார் ஜாய் கிரிசில்டா. இந்த புகாரின் அடிப்படையில் மாதம்பட்டி ரங்கராஜை விசாரணைக்கு ஆஜராஜ சொன்னார்கள். இதையடுத்து தீபாவளிக்கு முன்பு தன்னுடைய முதல் மனைவி ஸ்ருதி உடன் வந்து விசாரணைக்கு ஆஜர் ஆனார் மாதம்பட்டி ரங்கராஜ். இதையடுத்து அடுத்தக்கட்ட விசாரணை நடைபெறும் முன்னரே ஜாய் கிரிசில்டாவுக்கு குழந்தை பிறந்தது. ஆண் குழந்தை பிறந்த கையோடு, அதற்கு தந்தை மாதம்பட்டி ரங்கராஜ் தான் என பிறப்பு சான்றிதழ் வாங்கி அதை இன்ஸ்டாவில் பதிவிட்டார் ஜாய்.
இந்த நிலையில், மகளிர் ஆணையத்தில் நடந்த விசாரணையில் மாதம்பட்டி ரங்கராஜ் சொன்னது என்னென்ன என்பதைப் பற்றி ஜாய் கிரிசில்டா இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். அந்த விசாரணையில் தான் ஜாய் கிரிசில்டாவை காதலித்து திருமணம் செய்துகொண்டதை மாதம்பட்டி ரங்கராஜ் ஒப்புக்கொண்டதாகவும், அந்த குழந்தைக்கு அப்பா நான் தான் என்றும் உண்மையை ஒப்புக்கொண்டாராம். இதனால் விரைவில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாக ஜாய் கிரிசில்டா இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார்.