பிரபல தயாரிப்பு நிறுவனமான சாந்தி டாக்கீஸ் இந்த படத்தை தயாரிக்க, மாவீரனாக சிவகார்த்திகேயனும், அவருடைய நாயகியாக அதிதி சங்கரும், வெகுநாட்கள் கழித்து மீண்டும் நடிக்க வந்திருக்கும் மூத்த நடிகை சரிதா சிவகார்த்திகேயனின் தாயாகவும் நடித்துள்ளார். அதே சமயத்தில் வழக்கம் போல சிவாவுடன் நகைச்சுவை கலாட்டா செய்ய யோகி பாபுவும் களமிறங்கவுள்ளார்.