காதல் காயங்களுக்கு மருந்து தடவிய டி.ராஜேந்தர்.! டிஜிட்டல் காலத்திலும் அழியாத டி.ஆர். எமோஷனல் ஹிட்ஸ்!

Published : Feb 22, 2026, 08:13 AM IST

டி. ராஜேந்தர், 80-களில் தன் இசையாலும் வரிகளாலும் காதல் தோல்வி கண்ட இளைஞர்களுக்கு மருந்தாக விளங்கினார். ஒருதலைக் காதல், பிரிவு, பாசம் என உணர்ச்சிகளின் பிரம்மாண்டத்தை தன் பாடல்களில் வெளிப்படுத்தினார்.

PREV
18
பாடல்களில் இருந்த மேஜிக்.!

தமிழ் திரையுலகில் “பன்முகத்தன்மை”என்ற சொல்லுக்கு இலக்கணம் வகுத்தவர் டி. ராஜேந்தர். 80-களில் காதல் தோல்வியால் தவித்த ஒட்டுமொத்த இளைஞர் கூட்டத்திற்கும் தன் இசையாலும் வரிகளாலும் மருந்திட்டவர் இவர். இன்று எத்தனையோ நவீன இசையமைப்பாளர்கள் வந்துவிட்டாலும், டி.ஆரின் 'எமோஷனல் மேஜிக்' இன்றும் குறையாமல் இருப்பதற்குக் காரணம் அவர் பாடல்களில் இருந்த ஆன்மா.

28
ஒருதலைக் காதலின் வலியை மருந்தாக்கிய மாயம்

காதல் தோல்வி அடைந்த ஒருவன் தனிமையில் அழும்போது, அவனுக்குத் துணையாக நின்றது டி.ஆரின் குரல்தான். ஒரு தலை ராகம் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள  "வாசமில்லா மலரிது" பாடல் வெறும் இசை அல்ல; அது ஏமாற்றப்பட்ட இதயங்களின் ஒருமித்த குரல். வரிகளில் இருந்த நேர்மையும், மெட்டில் இருந்த சோகமும் அந்த கால இளைஞர்களின் மனஅழுத்தத்தைக் குறைக்கும் ஒரு வடிகாலாக அமைந்தது. உண்மை உணர்வை அவர் வெளிப்படுத்தியதால் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர்.

38
பிரிவின் புயலைத் தாங்கும் இசைத் தோணி

காதலியின் பிரிவை வெறும் துயரமாக மட்டும் பார்க்காமல், அதை ஒரு காவியமாக மாற்றியவர் டி.ஆர். மைதிலி என் காதலி திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள  "பொன்மானைத் தேடி" பாடலில் 'உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல' என்ற வரி, காதலின் உச்சகட்ட ஏக்கத்தைப் பதிவு செய்தது. அதேபோல் உயிருள்ளவரை உஷா  படத்தில் உள்ள "வைகைக்கரைக் காற்றே நில்லு" என்று அவர் காற்றைத் தூது அனுப்பும்போது, கேட்கும் ஒவ்வொரு இதயமும் தங்களுக்குத் தெரிந்த ஒருவருக்காகக் கண்ணீர் சிந்தியது. காதல் வயப்பட்டவர்களுக்கும் பிரிந்து இருக்கும் காதலர்களக்கம் இது மருந்தாக இருந்தது. இருக்கிறது.! இதனால் சாரை சாரையாக கல்லூரி மாணவர்கள் இந்த படத்தை பார்த்து ரசித்தனர்.

48
குடும்பப் பாசமும்... இதயத்தை உருக்கும் மெலடிகளும்

டி.ஆர் வெறும் 'காதல்' இயக்குனர் மட்டுமல்ல; உறவுகளின் உன்னதத்தை இசைத்தவர். தங்கைக் கோர் கீதம் படம் மூலம் அண்ணன்-தங்கை பாசத்தை "தஞ்சாவூர் மேளம்" வழியே உலகிற்குச் சொன்னார். ரயில் பயணங்களில் திரைப்படத்தில் இடம்பெற்ற "வசந்த காலங்கள்" பாடல், காதலின் ஆரம்ப காலத்து மென்மையை இன்றும் நம் காதுகளில் ஒலிக்கும் தேனாக மாற்றியது.

58
டிஜிட்டல் காலத்திலும் ஏன் இன்றும் டி.ஆர்?

இன்று 4K தரம், டிஜிட்டல் இசை என உலகம் மாறினாலும், டி.ஆரின் பாடல்களில் இருந்த அந்த “நேர்மை” மாறவில்லை. அடுக்குமொழி வசனங்களும், எதுகை மோனை பாடல்களும் அன்றைய இளைஞர்களுக்கு ஒரு புதுவித உற்சாகத்தைத் தந்தன. "காதல் தோல்வி என்றால் அது டி. ராஜேந்தர்; உணர்ச்சி என்றால் அது டி. ராஜேந்தர்; 80-களின் இதயம் துடித்த சத்தம் என்றால் அது டி.ஆரின் பாடல்களே!"

68
ஒரு ‘ஒன் மேன் ஆர்மி’ சாதனை

தமிழ் சினிமாவில் ஒரு படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், இசை, பாடல்கள், தயாரிப்பு, படத்தொகுப்புஎன அனைத்துத் துறைகளையும் ஒரே ஆளாகக் கவனித்துக்கொண்ட முதல் கலைஞர் டி.ஆர் தான்.ஒரு படத்தில் அதிகப்படியான பணிகளை மேற்கொண்டதற்காக இவர் பலமுறை பாராட்டப்பட்டுள்ளார். மற்றவர்கள் உதவியின்றி ஒரு முழுத் திரைப்படத்தை உருவாக்கி முடிக்கும் ஆற்றல் இவருக்கு மட்டுமே இருந்தது.

78
எளிய கருவிகளில் இசை மேஜிக் டி.ஆர்

பெரிய இசைக்குழுக்களை விட, எளிய வாத்தியங்களைக் கொண்டு ஆன்மாவைக் கரைக்கும் இசையைக் கொடுப்பவர்.அவர் பயன்படுத்திய ‘சிந்தசைசர்’ ஒலிகள் மற்றும் புல்லாங்குழல் இசை 80-களின் இரவு நேரங்களில் பல இளைஞர்களுக்குத் தாலாட்டாக அமைந்தது.

88
ஏன் டி.ஆர் ஒரு ‘கலைப் புயல்’?

80-களில் மற்ற இயக்குனர்கள் யதார்த்தமான கதைகளைச் சொல்ல முயன்றபோது, டி.ஆர் "உணர்ச்சிகளின் பிரம்மாண்டத்தை" கையில் எடுத்தார். அவரது உடலசைவு, நீண்ட தாடி, மற்றும் எமோஷனல் பேச்சுகள் அவரை ஒரு சினிமா கலைஞனாகத் தாண்டி ஒரு ‘கல்ட்’ பிம்பமாக மாற்றியது. டி. ராஜேந்தர் வெறும் கலைஞர் அல்ல, அவர் ஒரு சகாப்தம். காதலால் காயப்பட்டவர்களுக்கு தன் பாடல்களின் மூலம் மருந்து தடவி, அவர்களைத் தேற்றிய அந்த 'கலைப் புயல்' இன்றும் நம் இதயங்களில் வீசிக்கொண்டே இருக்கிறது. டிஜிட்டல் யுகத்தில் எத்தனையோ 'வைரல்' பாடல்கள் வரலாம், ஆனால் டி.ஆரின் 'எமோஷனல் மேஜிக்' என்றும் அழியாதது!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories