
லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவில் அதிகம் தேடப்படும் திறமையான இயக்குனர்களில் ஒருவராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார். தனது முதல் படமான மாநகரம் படத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த லோகேஷ் கனகராஜ், கைதி, மாஸ்டர், விக்ரம் என அடுத்தடுத்து பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்து மோஸ்ட் வாண்டட் இயக்குனர்களில் ஒருவராக மாறி உள்ளார்.
அந்த வகையில் மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் - விஜய் கூட்டணியில் உருவாகி உள்ள படம் தான் லியோ. அக்ஷன் - த்ரில்லர் படமாக உருவாகி உள்ள இப்படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், த்ரிஷா, கௌதம் மேனன், சாண்டி மாஸ்டர், மன்சூர் அலிகான் ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
எனவே இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாகஉள்ளது. லியோ படத்தின் ட்ரெய்லர், பாடல் என அனைத்தும் இப்படம் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. மேலும் லியோ படம் லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸான LCU-வின் ஒரு பகுதியாக இருக்குமா என்ற கேள்விக்கும் தற்போது விடை கிடைக்கவில்லை. இதனால் லியோ படத்தை திரையில் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இதனிடையே லியோவை தொடர்ந்து லோகேஷ் முதன்முறையாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 171 வது படத்தை இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தலைவர் 171 படத்தின் கதையை நடிகர் விஜய்யிடம் தெரிவித்ததாக லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். மேலும் தலைவர் 171 படத்தின் கதை விஜய்க்கு மிகவும் பிடித்திருந்ததாவும், அதற்கு Mind blowing என்று விஜய் கூறியதாகவும் லோகேஷ் தெரிவித்துள்ளார்.
சுவாரஸ்யமாக, தலைவர் 171 படத்தின் கதை யோசனையில் மிகவும் ஈர்க்கப்பட்ட தளபதி விஜய், வெறும் 10 நிமிட கதை சொன்ன உடனேயே எந்த கதையையும் இதற்கு முன்பு விரும்பியதில்லை என்பதை லோகேஷிடம் கூறிதாகவும் தெரிவித்தார். மேலும் “ பயங்கராமா இருக்கு டா " என்று கூறி ரஜினி - லோகேஷ் இணையும் முதல் படத்தை ஆவலுடன் எதிர்நோக்கி இருப்பதாகவும் கூறியுள்ளார்.தலைவர் 171 கதைக்கு தளபதி விஜய் கொடுத்த ரியாக்ஷன் அந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது..
லோகேஷ் கனகராஜ் தலைவர் 171 திரைப்படத்தை ஒரு தனித் திரைப்படமாகத் திட்டமிடுகிறார், இப்படம் LCU இன் ஒரு பகுதியாக இருக்காது. ரஜினிகாந்த் நடிக்கும் படம் ஒரு நேர்த்தியான ஆக்ஷன் த்ரில்லராக இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார்.
தலைவர் 171 படத்தை முடித்த பிறகு, லோகேஷ் கனகராஜ் தனது நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட கைதி 2 படத்தின் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளார். பின்னர், அவர் விக்ரம் 2 படத்திற்காக கமல்ஹாசனுடன் மீண்டும் இணைய உள்ளார். இவை தவிர சூர்யாவை வைத்து ரோலக்ஸ் என்ற படத்தை இயக்க திட்டமிட்டுள்ள லோகேஷ் கனகராஜ், நடிகர் பிரபாஸை வைத்து ஆக்ஷன் படத்தை இயக்க உள்ளதாகவும் உறுதிப்படுத்தியுள்ளார்.