சிரஞ்சீவி மற்றும் சல்மான் கானை சந்தித்த கமல்.. நன்றி சொன்ன லோகேஷ் கனகராஜ் !

Kanmani P   | Asianet News
Published : Jun 12, 2022, 06:36 PM ISTUpdated : Jun 12, 2022, 06:39 PM IST

 'விக்ரம்' படத்தின் வெற்றிக் கொண்டாட்டத்தில் பாலிவுட் நடிகர் சல்மான் கானுடன் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியும் கலந்து கொண்டார். 

PREV
14
சிரஞ்சீவி மற்றும் சல்மான் கானை சந்தித்த கமல்.. நன்றி சொன்ன லோகேஷ் கனகராஜ் !
vikram celebration

லோகேஷ் கனகராஜுக்கு உலகம் முழுவதும் இருந்து 'விக்ரம்' படத்திற்காக பாராட்டுகள் குவிந்து வருகிறது. மேலும் கமல்ஹாசனின் தீவிர ரசிகரான லோகேஷ் கனகராஜ் தனது கனவை 'விக்ரம்' வெற்றியின் மூலம் நிறைவேற்றி வருகிறார். கமல்ஹாசன், படத்தின் வெளியீட்டிற்குப் பிறகு, இயக்குனருக்கு ஒரு சொகுசு காரையும், துணை இயக்குனர்களுக்கு விலையுயர்ந்த பைக்கையும் பரிசளித்துள்ளார்.

 

24
vikram celebration

கமல், சூர்யா, விஜய் சேதுபதி, பகத்பாசில் என மல்டி ஸ்டாரர் ஆக்‌ஷன் திரைப்படமான 'விக்ரம்' உலகம் முழுவதும் ரூ 300 கோடியை நெருங்கி வருகிறது. அதே நேரத்தில் படத்தின் தமிழ்நாட்டு வசூல் ரூ 100 கோடியைத் தாண்டியுள்ளது. 'விக்ரம்' படம் 9 நாட்களில் உலகம் முழுவதும் ரூ 285 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இது ஏற்கனவே பாக்ஸ் ஆபிஸில் கமல்ஹாசனின் சிறந்த படமாக மாறிவிட்டது..  இதன் மூலம் கமல்ஹாசன் பாக்ஸ் ஆபிஸில் தனது பலத்தை நிரூபித்தார்.

34
vikram celebration

'விக்ரம் ' திரைப்படம் வெளியாகி இரண்டு வாரங்கள் முடிவதற்குள் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இதன் பொருட்டு நடைபெற்ற படத்தின் வெற்றிக் கொண்டாட்டத்தில் பாலிவுட் நடிகர் சல்மான் கானுடன் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியும் கலந்து கொண்டார். மும்மொழி சூப்பர் ஸ்டார்ஸ் இணைந்திருக்கும் சின்ஹா புகைப்படம் சமூக வலைதளத்தில் தீயாய் பரவி வருகிறது. விக்ரம் வெற்றி குறித்து இயக்குனருக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

44
vikram celebration

இந்நிலையில் வெற்றி கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு வாழ்த்திய அவர்களுக்கு லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார். அதில்,"இது என்ன ஒரு அருமையான மாலை! நன்றி  சிரஞ்சீவி சார்,எங்களை அங்கு சேர்த்ததற்கு மிக்க மகிழ்ச்சி சல்மான் கான் சார்,  மீண்டும் ஒருமுறை நன்றி கமலஹாசன் சார் என எழுதியுள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories