கோலிவுட்டில் நம்பர் 1 இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். அவர் இயக்கிய மாநகரம், மாஸ்டர், கைதி, விக்ரம், லியோ ஆகிய ஐந்து படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன. இதையடுத்து ரஜினிகாந்த் உடன் கூட்டணி அமைத்த லோகேஷ் கனகராஜ் தற்போது கூலி என்கிற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் ஆக வாய்ப்புள்ளது.
24
கைதி 2 லோடிங்
கூலி படத்தை முடித்ததும் நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகும் கைதி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க உள்ளார் லோகேஷ் கனகராஜ். இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கைதி படத்தின் இரண்டாம் பாகத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இப்படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக மலையாள நடிகை ரஜிஷா விஜயன் நடிக்க உள்ளாராம். இது ஒரு எல்சியூ படம் ஆகும்.
கைதி 2 படத்திற்கு பின்னர் லோகேஷ் கனகராஜ் எந்த படத்தை இயக்க உள்ளார் என்பது தான் புரியாத புதிராக இருந்து வந்தது. ஏனெனில் அவர் கைவசம் விக்ரம் 2, ரோலெக்ஸ், இரும்புக்கை மாயாவி போன்ற படங்கள் இருந்தாலும் அதையெல்லாம் கிடப்பில் போட்டுவிட்டு அவர் பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளதாக அண்மையில் செய்திகள் வெளியானது. பாலிவுட்டில் அமீர்கான் நடிக்கும் படத்தை அவர் இயக்க உள்ளதாகவும் அதற்கான பேச்சுவார்த்தை நடப்பதாகவும் கூறப்பட்டது.
44
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனுஷ்
ஆனால் தற்போது திடீர் ட்விஸ்டாக, கைதி 2 படத்தை முடித்த கையோடு தனுஷுடன் லோகி கூட்டணி அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுவரை ஆக்ஷன் படங்களாக இயக்கி வந்த லோகேஷ், தனுஷிடம் ரொமாண்டிக் கதை ஒன்றை சொல்லி ஓகே வாங்கி இருக்கிறாராம். தற்போது லோகியை போல் தனுஷும் செம பிசியாக நடித்து வருவதால் இருவரும் தங்கள் கமிட்மெண்ட்டுகளை முடித்த பின்னர் இணைந்து பணியாற்ற முடிவு செய்துள்ளார்களாம்.