Lokesh Kanagaraj working experience with Rajinikanth
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் 'கூலி’. ரஜினிகாந்த் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் பணிபுரிந்த அனுபவத்தைப் பற்றி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சமீபத்திய பேட்டியில் பகிர்ந்துள்ளார். 'வாழ்க்கையைப் பற்றி சிந்திக்க வைத்தார்... நான் அழுதேன், சிரித்தேன். ஒவ்வொரு நாளும் நான் ஏதாவது கற்றுக்கொண்டேன்' என்று லோகேஷ் கனகராஜ் குறிப்பிட்டுள்ளார். அதேபோல் ஷூட்டிங்கின் போது ரஜினி பற்றி சத்யராஜ் சொன்ன விஷயத்தையும் லோகேஷ் பகிர்ந்துள்ளார்.
24
ரஜினி பற்றி லோகேஷ் கனகராஜ் சொன்னதென்ன?
அதன்படி கூலி படப்பிடிப்பில் லேட்டாக தான் சத்யராஜ் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டு இருக்கிறது. சத்யராஜ் முதல்நாள் ஷூட்டிங் வந்தபோது, அவருக்கு அதுவரை ரஜினிகாந்த் நடித்த காட்சிகளை போட்டுக் காட்டினாராம் லோகேஷ். அந்தக் காட்சிகளை பார்த்த சத்யராஜ், சிலர் ஹீரோவாக நடிப்பார்கள். ஆனால் நிஜ வாழ்க்கையிலும் ஒருவர் ஹீரோவாக இருக்க முடியும் என்றால் அது ரஜினி தான் என சத்யராஜ் கூறினார். இந்த தகவலை பகிர்ந்த லோகேஷ் அவர்கள் இருவரும் இப்படத்தில் 37 ஆண்டுகளுக்கு பின் இணைந்துள்ளதாக தெரிவித்தார்.
34
கூலி படம் ஆகஸ்ட் 14ல் ரிலீஸ்
ஆகஸ்ட் 14 ஆம் தேதி 'கூலி' திரைப்படம் வெளியாகவுள்ளது. தற்போது இப்படத்தின் இறுதிகட்டப் பணிகளில் லோகேஷ் கனகராஜ் ஈடுபட்டுள்ளார். ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கடைசி படம் வேட்டையன். இப்படத்தை டி. ஜே. ஞானவேல் இயக்கி இருந்தார். அதேபோல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த படம் லியோ. விஜய் நடிப்பில் வெளியான இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இப்படம் வசூல் சாதனை படைத்தது. 'லியோ' படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
'லியோ' திரைப்படம் உலகம் முழுவதும் 620 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 14 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய் - த்ரிஷா ஜோடி மீண்டும் இணைந்து நடித்ததால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. இதுதவிர லோகேஷ் கனகராஜ் இதுவரை இயக்கிய மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களும் பிளாக்பஸ்டர் ஹிட்டாகின. அந்த வரிசையில் ரஜினிகாந்தின் கூலி படமும் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து உள்ளது.