சில படங்கள் எதிர்பார்ப்புகளைத் தாண்டி, திரையரங்குகளில் சிறப்பான வசூலைப் பெறுகின்றன. வாய்வழி விளம்பரமும் இதற்கு முக்கியக் காரணமாக அமைகிறது. வாய்வழி விளம்பரம் கிடைத்தால், அந்தப் படம் வெற்றிப் படமாக மாறும் என்பது உறுதி. அப்படி ஒரு படம் தான் லோகா சாப்டர் 1 சந்திரா. மலையாள சினிமாவிற்குப் புதிய திரை அனுபவத்தைத் தந்த லோகா, ஒவ்வொரு நாளும் வசூலில் சாதனை படைத்து வருகிறது. ஓணம் பண்டிகை நாட்கள் என்பதால் வசூலில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.
24
லோகா வசூல் சாதனை
லோகா சாப்டர் 1 சந்திரா திரையரங்குகளில் வெளியாகி பதினொரு நாட்கள் ஆகிறது. உலக அளவில் இதுவரை 168.25 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக சாச்னிக் தளம் தெரிவித்துள்ளது. விரைவில் 200 கோடி கிளப்பில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் இப்படத்தின் நிகர வசூல் 72.35 கோடியாகவும், மொத்த வசூல் 84.55 கோடியாகவும் உள்ளது. வெளிநாடுகளில் 83.70 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இந்தியாவிலேயே அதிக வசூல் அள்ளிய Female Centric படம் என்கிற சாதனையையும் லோகா படைத்துள்ளது.
34
மதராஸிக்கு டஃப் கொடுக்கும் லோகா
கேரளாவில் மட்டும் லோகா திரைப்படம் 51.75 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. அதேபோல் கர்நாடகாவில் 7.88 கோடி, தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசத்தில் 10.1 கோடி, தமிழ்நாட்டில் 10.85 கோடி என பிற மாநிலங்களிலும் லோகா திரைப்படம் சக்கைப்போடு போட்டு வருகிறது. அதே நேரத்தில், புக் மை ஷோவில் அதிக டிக்கெட்டுகள் விற்பனையாகும் படமாக லோகம் சாதனை படைத்துள்ளது. இப்படம் நேற்று மட்டும் கேரளாவில் ரூ.7.15 கோடி வசூலித்து உள்ளது. குறிப்பாக சிவகார்த்திகேயனின் மதராஸி படத்தைக் காட்டிலும் லோகா படத்திற்கு தான் அதிகப்படியாக டிக்கெட்டுகள் விற்பனையாகி உள்ளன.
சிவகார்த்திகேயன் நடித்த மதராஸி திரைப்படம் கேரளாவில் ரிலீஸ் ஆகி மூன்று நாட்கள் ஆகிறது. அப்படம் அங்கு வெறும் 1.45 கோடி மட்டுமே வசூலித்து இருக்கிறது. ஆனால் லோகா திரைப்படம் நேற்று ஒரே நாளில் அதைவிட ஐந்து மடங்கு அதிக வசூலை அள்ளி சாதனை படைத்துள்ளது. மற்றுமொரு ஆச்சர்யமான தகவல் என்னவென்றால் லோகா படத்தின் நாயகி கல்யாணி பிரியதர்ஷன், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஹீரோ என்கிற படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மதராஸி திரைப்படம் ரிலீஸ் ஆன மூன்றே நாட்களில் உலகளவில் ரூ.62 கோடி வசூலித்திருக்கிறது.