டிசம்பரில் பாக்ஸ் ஆபிஸை தெறிக்கவிட காத்திருக்கும் டாப் 10 டக்கரான திரைப்படங்களின் முழு லிஸ்ட் இதோ

Published : Dec 02, 2025, 09:32 AM IST

டிசம்பர் மாதம் ஏராளமான புதுப்படங்கள் வெளியாக உள்ளன. இவற்றில் சில படங்களுக்கு ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். அது என்னென்ன படங்கள் என்பதை பார்க்கலாம்.

PREV
110
அகண்டா 2

நந்தமுரி பாலகிருஷ்ணா, அகண்டா படத்தின் இரண்டாம் பாகமான அகண்டா 2 உடன் மீண்டும் வருகிறார். போயபதி ஸ்ரீனு இயக்கும் இந்த படத்தில் அதிரடி ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்துள்ளன. இப்படம் டிசம்பர் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

210
லாக்டவுன்

ஏ.ஆர். ஜீவா இயக்கும் 'லாக்டவுன்' படத்தில் அனுபமா பரமேஸ்வரன் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படம் டிசம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதில் சார்லி, நிரோஷா, பிரியா வெங்கட், லிவிங்ஸ்டன், இந்துமதி, ராஜ்குமார், ஷாம்ஜி, லொள்ளு சபா மாறன், விநாயக் ராஜ் ஆகியோரும் உள்ளனர்.

310
வா வாத்தியார்

கார்த்தியின் 'வா வாத்தியார்' திரைப்படம் டிசம்பர் 11ஆம் தேதி வெளியாகிறது. நலன் குமாரசாமி இயக்கும் இப்படத்தில் கீர்த்தி ஷெட்டி, சத்யராஜ் மற்றும் ராஜ்கிரண் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

410
களம் காவல்

தென்னிந்திய சூப்பர் ஸ்டார் மம்மூட்டியின் 'களம்காவல்' ஒரு க்ரைம் த்ரில்லர் படமாகும். இதை அறிமுக இயக்குனர் ஜிதின் கே. ஜோஸ் இயக்கியுள்ளார். இது டிசம்பர் 5ஆம் தேதி வெளியாகிறது.

510
அங்கம்மாள்

விபின் ராதாகிருஷ்ணன் இயக்கிய 'அங்கம்மாள்' படத்தில் கீதா கைலாசம் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அவருடன் சரண் சக்தி, தென்றல் ரகுநாதன், பரணி ஆகியோரும் உள்ளனர். இப்படம் டிசம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

610
தி டெவில்

தர்ஷனின் 'தி டெவில்' ஒரு ஆக்‌ஷன் த்ரில்லர் படமாகும். இதை பிரகாஷ் எழுதி இயக்கியுள்ளார். இப்படம் டிசம்பர் 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

710
லவ் இன்சூரன்ஸ் கம்பெனி

விக்னேஷ் சிவனின் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' திரைப்படம் டிசம்பர் 18ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் மற்றும் எஸ்.ஜே. சூர்யா முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார்.

810
ரெட்ட தல

அருண் விஜய்யின் 'ரெட்ட தல' திரைப்படம் டிசம்பர் 18ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த ஆக்‌ஷன் த்ரில்லர் படத்தை கிரிஸ் திருக்குமரன் இயக்கியுள்ளார். இதில் சித்தி இத்னானி மற்றும் தன்யா ரவிச்சந்திரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

910
பாபாபா

சூப்பர் ஸ்டார் திலீப் நடிக்கும் ஆக்‌ஷன்-காமெடி படமான 'பாபாபா' டிசம்பர் 18ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. தனஞ்செய் சங்கர் இயக்கும் இப்படத்தில் மோகன்லால் ஒரு சிறிய வேடத்தில் நடித்துள்ளார்.

1010
சர்வமய

நிவின் பாலியின் மலையாள ஃபேன்டஸி காமெடி-ஹாரர் படமான 'சர்வமய' டிசம்பர் 25ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தை அகில் சத்யன் இயக்கியுள்ளார், இதில் அஜு வர்கீஸ் நடித்துள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories