குற்றம் புரிந்தவன்: தி கில்டி ஒன் (Kuttram Purindhavan : The Guilty One)
ததகதா முகர்ஜி இயக்கிய பெங்காலி ஆக்ஷன் த்ரில்லர் படம் இது. விக்ரம் சாட்டர்ஜி, அங்கனா ராய், ஸ்ரீலேகா மித்ரா, அம்பரீஷ் பட்டாச்சார்யா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பிப்ரவரி 9, 2024-ல் திரையரங்குகளில் வெளியான இப்படம், டிசம்பர் 5 முதல் ஜீ5ல் காண கிடைக்கும்.
கேசரியா@100 (Kesariya@100)
இது ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கின் (RSS) 100 ஆண்டு கால பயணத்தை காட்டும் ஒரு டாக்குமெண்டரி தொடர். 'மகாபாரதம்' (1988) கிருஷ்ணர், 'ராமாயணம்' (2001) ராமர் வேடங்களில் நடித்த நிதிஷ் பரத்வாஜ் இதை தொகுத்து வழங்குகிறார். இதுவும் இந்த வாரம் ஜீ 5 ஓடிடியில் ஸ்ட்ரீம் ஆகும்.
கர்வாலி பேட்வாலி (Gharwali Pedwali)
இது ஒரு இந்தி சூப்பர்நேச்சுரல் காமெடி டிராமா தொடர். இதில் பராஸ் அரோரா, பிரியம்வதா காந்த், பப்லு முகர்ஜி மற்றும் ரிச்சி சோனி போன்ற நடிகர்கள் நடித்துள்ளனர். இதன் தயாரிப்பு நிறுவனம் பெனின்சுலா பிக்சர்ஸ் ஆகும். இது டிசம்பர் 5 முதல் ஜீ5 ஓடிடியில் கிடைக்கும்.