
ஜன நாயகன் படத்தின் பட்ஜெட் ரூ.300 கோடி என்று விக்கிப்பீடியா பக்கத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதில் விஜய்க்கு மட்டும் ரூ.275 கோடி சம்பளமாம். இதன் மூலமாக இந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் ஒரு நடிகராக விஜய் சாதனை படைத்திருக்கிறார். இது ஒரு புறம் என்றாலும் மற்ற நடிகர், நடிகைகள், படப்பிடிப்பு தளங்கள், டெக்னீசியன்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், கலை இயக்குநர்கள் என்று பலரும் இருக்கும் போது அவர்களுக்கு எவ்வளவு சம்பளம் இருக்கும்? எஞ்சியிருக்கும் ரூ.25 கோடியில் இத்தனை பேருக்கும் சம்பளம் கொடுக்க முடியுமா?
இதெல்லாம் கேள்வியாக இருந்தாலும் இப்போது ஜன நாயகன் குறித்து முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது அது என்னவென்று பார்க்கலாம். விஜய்க்கு முழு சம்பளமும் கொடுக்கப்படவில்லை என்று தகவல் வெளியான நிலையில் அதனால் தான் அவர் டப்பிங்கை கூட இன்னும் முடிக்கவில்லை என்று சொல்லப்பட்டது. ஆனால், கடந்த சில தினங்களுக்கு முன்பாகவே விஜய் தனது டப்பிங் பணியை முடித்துவிட்டார். அவருடன் இணைந்து பூஜா ஹெக்டேவும் டப்பிங்கை முடித்து கொடுத்துள்ளார்.
இயக்குநர் ஹெச் வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, பிரியாமணி, மமிதா பைஜூ, மோனிஷா பிளெஸி, பாபி தியோல், கௌதம் மேனன், பிரகாஷ் ராஜ், நரைன், ரெபே மோனிகா ஜான் என்று ஏராளமான பிரபலங்கள் படத்தில் நடித்துள்ளனர். கேவிஎன் புரோடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இவரது இசையில் உருவான தளபதி கச்சேரி சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி பட்டிதொட்டியெங்கும் வைப் செய்யப்பட்டது.
முழுக்க முழுக்க அரசியல் மற்றும் ஆக்ஷன் கதையை மையப்படுத்திய இந்தப் படத்தில் விஜய் போலீஸ் அதிகாரியாக வருகிறார் என்று வெளியாகி வரும் புகைப்படங்களை வைத்து அறிந்து கொள்ள முடிகிறது. விஜய்யின் 69ஆவது படமாக உருவாகியிருக்கும் இந்தப் படம் வரும் 2026 ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வருகிறது.
விஜய் அரசியலில் களமிறங்கிய சூழலில் இந்தப் படத்தை ஹிட் படமாக்க விஜய் அரசியல் மட்டுமின்றி இப்போது தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள், நிர்வாகிகள் என்று அனைவருமே ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்தப் படத்தின் முதல் சிங்கிள் டிராக் வெளியான நிலையில் அடுத்ததாக இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவை மலேசியாவில் நடத்த இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதன்படி வரும் 27ஆம் தேதி மலேசியாவில் உள்ள புக்கீட் ஜலீல் மைதானத்தில் இசை வெளியீட்டு விழாவை நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
இந்த மைதானத்தில் கிட்டத்தட்ட 85 ஆயிரம் முதல் 87 ஆயிரம் பேர் வரையில் அமர்ந்து பார்க்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் தான் படத்தின் பட்ஜெட் ரூ.300 கோடி என்ற சூழலில் தற்போது வரையில் 60 ஆயிரத்திற்கும் அதிகமாக இசை வெளியீட்டு விழாவிற்கான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்த நிலையில் இதன் மூலமாக ரூ.250 கோடிக்கும் அதிகமாக ஜன நாயகன் வருவாய் ஈட்டியுள்ளது.
அதோடு படம் வெளியாவதற்கு முன்னதாகவே ரூ.250 கோடி வசூல் குவித்த சாதனையை ஜன நாயகன் படைத்துள்ளது. இன்னும், ஸ்டேட்லைட், ஓடிடி உரிமைகள் என்று இருக்கிறது. இதையெல்லாம் வைத்து பார்க்கையில் படம் எப்படியும் ரூ.1000 கோடி வசூல் எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2026ஆம் ஆண்டில் வெளியாகும் முதல் படமே வெற்றி படமாகவும் அமையும் என்று தெரிகிறது.
மேலும், தமிழ் சினிமாவில் டான்ஸ் என்றாலே அது விஜய் தான் என்று ரசிகர்களால் மணிமகுடம் சுட்ட பட்டவர் தளபதி விஜய். ஓவ்வொரு பாடலுக்கும் Signature step இருக்கும். அப்பாடல் வெளியானதும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் Signature step ல் ரில்ஸ் செய்து அப்பாடலை வைப் செய்வார்கள்.
டான்ஸிற்கு உதாரணம் என்றால் அதற்கு விஜய்யைத்தான் எல்லோரும் குறிப்பிடுவார்கள். விஜய் என்றாலே டான்ஸ் என்று சினிமா பிரபலங்கள் மெச்சிப்பது உண்டு. அந்தளவிற்கு ஒரு முறை பார்த்துவிட்டால் டான்ஸ் ஸ்டெப்பை அப்படியே போட்டு பிரமிக்க வைப்பார் என்று சொல்வதுண்டு. ஏன் அப்படியெல்லாம் சொல்கிறார்கள் என்று இப்போதுதான் புரிகிறது.