இதையடுத்து சினிமாவில் நுழைய முடிவெடுத்த சரவணன், புதிதாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கி, அதன் முதல் படமான தி லெஜண்ட் படத்தில் தானே ஹீரோவாக நடிக்க உள்ளதையும் அறிவித்தார். கடந்த 2019-ம் ஆண்டு இப்படம் தொடர்பான அறிவிப்பு வெளியானது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இப்படத்தை எடுத்து முடிக்க கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் ஆகிவிட்டது.