90களில் முன்னணி நடிகையாக இருந்த ரம்பா, தற்போது சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மட்டுமே நடுவராக பங்கேற்று வருகிறார். அவ்வப்போது தன்னுடைய குழந்தைகளுடன் புகைப்படங்கள் வெளியிடுவதையும் வழக்கமாக வைத்துள்ள இவர், பிரபல நடிகைகள் வீட்டு பூஜையில் கலந்து கொண்ட போட்டோஸ் தற்போது வெளியாகியுள்ளது.
திருமணத்திற்கு பின்னர் வழக்கமான குடும்ப பிரச்சனைகளில் ரம்பா சிக்கிய போதும்... ஒருவழியாக அதில் இருந்து மீண்டு மீண்டும் கணவருடன் இணைந்தார். தற்போது இந்த தம்பதி 2 மகள்கள் மற்றும் ஒரு மகனுடன் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள்.
இதை தொடர்ந்து பிரபல நடிகைகள் வீட்டில் நடந்த வரலட்சுமி பூஜையில் குழந்தைகளுடன் கலந்து கொண்டுள்ளார். அந்த புகைப்படங்களும் தற்போது வெளியாகியுள்ளது.
பார்பவர்களையே பொறுமை படுத்தும் அளவுக்கு, மிகவும் கியூட் குழந்தைகளுடன்... வரலட்சுமி பூஜையில் ரம்பா கலந்து கொண்டுள்ளார். அந்த போட்டோஸ் இதோ...