நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த், தற்போது சினிமா பக்கம் தலைகட்டாமல் இருந்தாலும் பல வருடங்களுக்கு முன்பு வரை சினிமாவில் பாடல்கள் பாடுவது, படங்களை தயாரிப்பது போன்றவற்றை செய்து வந்துள்ளார். அதுமட்டுமின்றி இவர் ஒரே ஒரு படத்தில் மட்டும் கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார். அந்த படத்தின் பெயர் அக்னி சாட்சி. கே பாலச்சந்தர் இயக்கிய அப்படத்தில் ரஜினிகாந்தின் மனைவியாகவே ஒரே ஒரு காட்சியில் வந்து நடித்திருந்தார் லதா. அதன்பின்னர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 1986-ம் ஆண்டு வெளிவந்த மாவீரன், 1993-ம் ஆண்டு ரிலீஸ் ஆன வள்ளி போன்ற படங்களை தயாரித்திருந்தார் லதா.
24
லதா ரஜினிகாந்த் பாடிய 5 பாடல்கள்
லதா ரஜினிகாந்துக்கு இசையின் மீது ஆர்வம் இருந்தாலும் அவர் இதுவரை வெறும் 5 பாடல்கள் மட்டுமே பாடி இருக்கிறார். அதில் நான்கு பாடல்கள் தன்னுடைய கணவர் ரஜினிகாந்தின் படத்திற்காக பாடிய லதா, ஒரே ஒரு பாடலை மட்டும் கமல்ஹாசனின் படத்துக்காக பாடி இருக்கிறார். அதுமட்டுமின்றி இவர் பாடிய 5 பாடல்களில் நான்கிற்கு இசைஞானி இளையராஜா இசை, ஒரே ஒரு பாடலை மட்டும் ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடி இருந்தார். லதா ரஜினிகாந்த் பாடிய பாடல்கள் அனைத்தும் ஹிட் அடித்தன. அந்தப் பாடல்கள் என்னென்ன, அதில் கமலுக்காக அவர் பாடிய பாடல் என்ன என்பதை பார்க்கலாம்.
34
கமலுக்காக லதா பாடிய பாட்டு
லதா ரஜினிகாந்த் முதன்முதலில் பாடியதே கமல் படத்திற்கு தான். கடந்த 1981-ம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த டிக் டிக் டிக் படத்தில் தான் தன்னுடைய முதல் பாடலை பாடி இருக்கிறார் லதா. அப்படத்தில் இளையராஜா இசையில் இடம்பெற்ற நேற்று இந்த நேரம் பாடலை லதா ரஜினிகாந்த் தான் பாடி இருந்தார். அப்படத்தில் இடம்பெற்ற ஒரு அண்டர்ரேட்டட் பாடலாகவும் இது கருதப்படுகிறது. இப்பாடலுக்கு பாடல் வரிகளை கண்ணதாசன் எழுதி இருந்தார். இந்த ஒரு பாடல் தவிர அவர் பாடிய மற்ற பாடல்கள் அனைத்துமே ரஜினிகாந்தின் படங்களுக்கு தான்.
அதன்படி 1984-ம் ஆண்டு வெளியான அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் இடம்பெற்ற கடவுள் உள்ளமே பாடல், 1993-ல் ரிலீஸ் ஆன ரஜினிகாந்தின் வள்ளி படத்தில் இடம்பெற்ற டிங் டாங், குக்கூ கூ ஆகிய பாடல்களை லதா ரஜினிகாந்த் பாடி இருந்தார். அதேபோல் அவர் கடைசியாக பாடியதும் ரஜினி படத்திற்கு தான். கடந்த 2014-ம் ஆண்டு ஏ.ஆர்.ரகுமான் இசையில் ரஜினிகாந்தின் கோச்சடையான் படத்திற்காக மணப்பெண்ணின் சத்தியம் என்கிற பாடலை பாடி இருந்தார் லதா ரஜினிகாந்த். இன்று பல கல்யாண வீடுகளில் இந்த பாடலை கேட்காத ஆளே இருக்க முடியாது. அந்த அளவுக்கு அழகாக பாடி இருப்பார்.