ஹாலிவுட் முதல் கோலிவுட் வரை எப்போதுமே வரலாற்று தொடர்பான படங்கள் என்றால் தனி மவுசு தான். இந்தியில் ராணி பத்மினியின் வாழ்க்கை தீபிகா படுகோனே நடிப்பில் பத்மாவத் பெயரில் வெளிவந்தது. ஜான்சி ராணி லட்சுமி பாய் வாழ்க்கை மணிகர்னிகா பெயரில் கங்கனா ரணாவத் நடிக்க வெளியானது. மலையாளத்தில் மம்முட்டி, மோகன்லால் நடிப்பில் சரித்திர படங்கள் வந்துள்ளன.
பதினேழாம் நூற்றாண்டில் சிவகங்கை பகுதியை ஆண்ட வீரமங்கை ராணி வேலுநாச்சியார். வெள்ளையனை எதிர்த்து ஆயுதம் ஏந்தி போர் புரிந்த இந்தியாவின் முதல் பெண் விடுதலைப் போராட்ட வீராங்கனையான வேலுநாச்சியாரின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உள்ளது.
தமிழ் சினிமாவில் பைவ் ஸ்டார், திருட்டு பயலே, கந்தசாமி உள்ளிட்ட படங்களை இயக்கியவர் சுசீந்திரன் அவர் வேலுநாச்சியாரின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க உள்ளார். அதில் நயன்தாரா வேலுநாச்சியார் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா வேலுநாச்சியார் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக சோசியல் மீடியாக்களில் தீயாய் தகவல்கள் வெளியாகின. இதனால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.
தற்போது இதற்கு நயன்தாரா தரப்பில் இருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியாகியுள்ள அறிக்கையில், ராணி வேலுநாச்சியார் வாழ்க்கை வரலாற்று படத்தில் நயன்தாரா நடிப்பதாக செய்திகள் பரவி வருகிறது. ராணி வேலுநாச்சியார் கதாபாத்திரத்தில் தான் நடிக்கவில்லை என நயன்தாரா மறுத்துள்ளார். இது ஒரு ஆதாரப்பூர்வ மற்ற செய்திகளை பதிவிடும் முன்பு ஒருமுறை உண்மை தன்மையை சோதித்து அறிந்து கொள் வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். தொலைபேசி மூலமாகவே, மெசெஜ் அல்லது மெயில் மூலமாகவே கூட இதுபோன்ற செய்திகளை உறுதிச் செய்துகொள்ளுங்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.