“நாங்க துணையா இருக்கோம் அனிதா”... ஆறுதல் கூறிய பிக்பாஸ் போட்டியாளர்கள்...!

First Published | Dec 29, 2020, 7:31 PM IST

அனிதா சம்பத்தின் தந்தை மறைவிற்கு சக பிக்பாஸ் போட்டியாளர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

பிரபல தொலைக்காட்சியின் தொகுப்பாளராக மட்டுமின்றி தற்போது பிக்பாஸ் போட்டியாளராகவும் புகழ் பெற்றவர் அனிதா சம்பத். பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்ற அனிதா சம்பத் 84 நாட்களுக்குப் பிறகு கடந்த ஞாயிற்று கிழமை அந்த வீட்டிலிருந்து வெளியேறினார்.
பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பிறகு நியூ இயரை சிறப்பாக கொண்டாட நினைத்த அனிதாவிற்கு பேரிடியாக அமைந்தது அவருடைய தந்தையின் மரண செய்தி.
Tap to resize

சீரடிக்கு சென்றிருந்த அனிதாவின் தந்தை ஆர்.சி.சம்பத் சென்னை திரும்பும் வழியில் ரயிலேயே காலமானார். தற்போது அவருடைய உடல் ஆம்புலன்ஸ் மூலம் சென்னை எடுத்து வரப்பட உள்ளது.
இதையடுத்து அனிதாவிற்கு சக பிக்பாஸ் போட்டியாளர்கள் ஆறுதல் தெரிவித்து சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகின்றனர். முதலில் சுரேஷ் சக்கரவர்த்தி, அனிதா மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கு எனது இதயப்பூர்வமான இரங்கல் என பதிவிட்டுள்ளார்.
ஜித்தன் ரமேஷ் அனிதா சம்பத் உடைய அப்பாவின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து. அனிதாவுடைய அப்பா மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அனிதாவிற்கும் அவருடைய குடும்பத்திற்கும் எனது இரங்கல் என பதிவிட்டுள்ளார்.
அறந்தாங்கி நிஷாவும் அனிதாவின் அப்பா ஆர்.சி.சம்பத் புகைப்படத்துடன், எதுக்கும் கவலைப்படாத அனிதா, எப்பவும் அப்பா உன்கூட தான் இருப்பாங்க. நாங்க எப்பவும் உன்கூட உனக்கு துணையாக இருப்போம் என ஆறுதல் கூறியுள்ளார்.

Latest Videos

click me!