தமிழ் சினிமாவுக்கு ஜூன் மாதம் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் மிகவும் மந்தமாக உள்ளது. இந்த மாதம், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கமல்ஹாசனின் தக் லைஃப் திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. அப்படத்தின் தோல்விக்கு பின்னர் ஜூன் 2வது வாரத்தில் விஜயகாந்தின் மகன் சண்முகப்பாண்டியன் நடித்த படைத் தலைவன் படம் மட்டுமே ரிலீஸ் ஆனது. அதுவும் பெரியளவில் சோபிக்கவில்லை. இதனால் வருகிற ஜூன் 20ந் தேதி தான் தமிழ் சினிமா ரசிகர்களின் டார்கெட்டாக உள்ளது. அன்றைய தினம் சில முக்கியமான படங்கள் ரிலீஸ் ஆகின்றன. அது என்னென்ன படங்கள் என்பதை பார்க்கலாம்.
24
தனுஷின் குபேரா
ஜூன் 20ந் தேதி தனுஷ் நடித்த குபேரா படம் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தை சேகர் கம்முலா இயக்கி உள்ளார். இதில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்துள்ளார். மேலும் நாகார்ஜுனா வில்லனாக நடித்திருக்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தில் தனுஷ் பிச்சைக்காரனாக நடித்துள்ளார்.
இப்படம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
34
அதர்வா நடித்த டிஎன்ஏ
தனுஷின் குபேரா படத்துக்கு போட்டியாக அதர்வாவின் டிஎன்ஏ படம் திரைக்கு வருகிறது. இப்படத்தை நெல்சன் வெங்கடேசன் இயக்கி உள்ளார். இவர் இதற்கு முன்னர் ஒரு நாள் கூத்து, மான்ஸ்டர் போன்ற படங்களை இயக்கி இருக்கிறார். இப்படத்தில் நடிகர் அதர்வாவுக்கு ஜோடியாக மலையாள நடிகை நிமிஷா சஜயன் நடித்திருக்கிறார்.
மெடிக்கல் கிரைம் திரில்லர் படமாக இது உருவாகி உள்ளது. இப்படத்திற்கு பார்த்திபன் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பு பணிகளை விஜே சாபு மேற்கொண்டுள்ளார். ஒலிம்பியா மூவீஸ் சார்பில் அம்பேத் குமார் இப்படத்தை தயாரித்துள்ளார். சத்யபிரகாஷ், ஸ்ரீகாந்த் ஹரிஹரன், பிரவின் சைவி, சாஹி சிவா மற்றும் அனல் ஆகாஷ் என மொத்தம் 5 இசையமைப்பாளர்கள் இப்படத்தில் பணியாற்றி உள்ளனர்.
விக்ரம் ராஜேஷ்வர், அருண் கேசவ் ஆகிய இரட்டை இயக்குனர்கள் இயக்கியுள்ள திரைப்படம் தான் சென்னை சிட்டி கேங்ஸ்டர். இப்படத்தில் வைபவ் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக அதுல்யா ரவி நடித்திருக்கிறார். டிஜோ டோமி ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்து உள்ளார். இப்படமும் ஜூன் 20ந் தேதி திரைக்கு வர உள்ளது.
பாபி பாலச்சந்திரன் தயாரித்துள்ள இப்படத்தில் மணிகண்டா ராஜேஷ், ஆனந்தராஜ், இளவரசு, சுனில் ரெட்டி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. வங்கியில் கொள்ளையடிக்க செல்லும் ஒரு காமெடி ரவுடிகளின் கதை தான் இந்த சென்னை சிட்டி கேங்ஸ்டர் படத்தின் கதை.