Kuberaa Ticket Price in Tamil : தனுஷ், ரஷ்மிகா மந்தனா, நாகார்ஜுனா நடிக்கும் 'குபேரா' ஜூன் 20ல் வெளியாகிறது. சேகர் கம்முலா இயக்கியுள்ள இப்படக்குழு, புதிய உத்தியை கையாண்டுள்ளது. பெரும்பாலும், பெரிய பட்ஜெட் படங்களுக்கு டிக்கெட் விலையை உயர்த்த அரசுக்கு விண்ணப்பிப்பார்கள். ஆனால், 'குபேரா' குழு ஆந்திரா, தெலங்கானா அரசுகளிடம் டிக்கெட் விலை உயர்வு கோரவில்லை.