2025-ம் ஆண்டு தமிழ் சினிமா முதல் 8 மாதங்களில் மொத்தம் வெளியான 175 படங்களில் 167 படங்கள் தோல்வியை சந்தித்துள்ளன. அதில் வெறும் 8 படங்கள் மட்டுமே ஹிட் ஆகி உள்ளன.
2025-ம் ஆண்டு தொடங்கி ஜெட் வேகத்தில் சென்றுகொண்டிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில் தற்போது தான் புத்தாண்டு கொண்டாடியது போல் இருந்தது, அதற்குள் 8 மாதங்கள் கடகடவென ஓடிவிட்டன. இந்த 8 மாதங்களில் தமிழ் சினிமா பல்வேறு ஏற்ற, இறக்கங்களை சந்தித்து இருக்கிறது. இந்த 8 மாதங்களில் மொத்தம் 175 படங்கள் தமிழில் வெளியாகி இருக்கின்றன. இதுதவிர ஒரே ஒரு தமிழ் படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகி இருந்தது. அது வேறெதுவுமில்லை, நடிகை நயன்தாரா, மாதவன், சித்தார்த், மீரா ஜாஸ்மின் ஆகியோர் நடிப்பில் உருவான டெஸ்ட் திரைப்படம் தான்.
24
கோலிவுட் ரிப்போர்ட்
8 மாதங்களில் வெளியான 175 படங்களில் வெறும் 8 படங்கள் தான் ஹிட்டாகி இருக்கின்றன. கூட்டிக் கழித்து பார்த்தால் இந்த ஆண்டில் 10 சதவீத படங்கள் கூட வெற்றியடையவில்லை. கடந்த ஆண்டு இந்த காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் 157 படங்கள் வெளியாகி இருந்தன. ஆனால் அதைவிட இந்த வருடம் 18 திரைப்படங்கள் கூடுதலாக ரிலீஸ் ஆகியும் அதில் பெரும்பாலான படங்கள் படுதோல்வியை தான் சந்தித்து இருக்கின்றன. இந்த வருடம் இதுவரை 167 படங்கள் தோல்வி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
34
ஹிட்டான படங்கள் என்னென்ன?
ஜனவரி மாதத்தில் விஷால் நடித்த மதகஜராஜா மற்றும் மணிகண்டனின் குடும்பஸ்தன் ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெற்றிபெற்றன. அடுத்ததாக பிப்ரவரியில், பிரதீப் ரங்கநாதனின் டிராகன் படம் மட்டுமே ஹிட் அடித்தது. மார்ச் மாதம் ஒரு படம் கூட ஹிட்டகவில்லை. ஏப்ரலில் அஜித் நடித்த குட் பேட் அக்லி ஹிட் அடித்தது. மே மாதம் சசிகுமாரின் டூரிஸ்ட் ஃபேமிலி படமும், சூரியின் மாமன் படமும் ஹிட்டாகின. ஜூன் மாதம் ஜீரோ ஹிட் படங்கள். ஜூலையில், விஜய் சேதுபதியின் தலைவன் தலைவி திரைப்படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. அடுத்ததாக ஆகஸ்டில் ரஜினிகாந்தின் கூலி படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது.
எஞ்சியுள்ள நான்கு மாதங்களில் தமிழ் சினிமா அதிக ஹிட் படங்களை கொடுத்தால் மட்டுமே பெரும் நஷ்டத்தில் இருந்து தப்பிக்க முடியும். இந்த நான்கு மாதங்களில் ஆயுத பூஜை விடுமுறை, தீபாவளி விடுமுறை, கிறிஸ்துமஸ் பண்டிகை ஆகியவை வருவதால், புதுப்படங்களும் கணிசமாக திரைக்கு வர காத்திருக்கின்றன. அதிலும் தீபாவளிக்கு பிரதீப் ரங்கநாதன் நடித்த இரண்டு படங்கள் ரிலீஸ் ஆக உள்ளன. இதுவரை தோல்வியை சந்திக்காத பிரதீப், மேலும் இரண்டு ஹிட் கொடுத்தால், அது அவருடைய கெரியருக்கு மட்டுமின்றி தமிழ் சினிமாவுக்கும் சாதகமாக அமையும். இதுதவிர கார்த்தி, சிவகார்த்திகேயன், சூர்யா ஆகியோரின் படங்களும் அடுத்த நான்கு மாதங்களில் ரிலீஸ் ஆக உள்ளதால் தமிழ் சினிமா தலைதூக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.