"சிபிஆர் கொடுத்திருந்தால் கேகே உயிருடன் இருந்திருப்பார்"..பகீர் கிளப்பிய மருத்துவர்

Kanmani P   | Asianet News
Published : Jun 03, 2022, 06:19 PM IST

பிரேத பரிசோதனை அறிக்கைகள், கே.கே.க்கு தமனிகளில் பெரிய அடைப்பு ஏற்பட்டதாகவும், நிகழ்ச்சியின் போது அதிகமான உற்சாகம் காரணமாக, அவரது இதயத்திற்கு இரத்த ஓட்டம் நிறுத்தப்பட்டதாகவும் குறிப்பிடப்படுள்ளது.

PREV
13
"சிபிஆர் கொடுத்திருந்தால் கேகே உயிருடன் இருந்திருப்பார்"..பகீர் கிளப்பிய மருத்துவர்
singer kk

கே.கே என்று அழைக்கப்படும் பிரபல பின்னணிப் பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத்தின் திடீர் மறைவு ரசிகர்களை வெகுவாக பாதித்துள்ளது. கடந்த செவ்வாய் கிழமை கொல்கத்தாவில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றுக்கொண்டிருந்தபோது கேகேவிற்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். இதையடுத்து அவரது உடல் காவல்துறையினரின் தோட்ட மரியாதைக்கு பிறகு மும்பையில் நேற்று தகனம் செய்யப்பட்டது.

23
singer kk

கேகேவின் பிரேத பரிசோதனை அறிக்கைகள்,  அவரது  இதய தமனிகளில் பெரிய அடைப்பு ஏற்பட்டதாகவும், நிகழ்ச்சியின் போது அதிகமான உற்சாகம் காரணமாக, அவரது இதயத்திற்கு இரத்த ஓட்டம் நிறுத்தப்பட்டு, பாடகருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

33
singer kk

பிரேத பரிசோதனை செய்த மருத்துவர் கூறுகையில் , "கேகேவுக்கு இடது பிரதான கரோனரி தமனியில் பெரிய அடைப்பு மற்றும் பல்வேறு தமனிகள் மற்றும் துணை தமனிகளில் சிறிய அடைப்பு இருந்தது. நேரலை நிகழ்ச்சியின் போது அதிகப்படியான உற்சாகம் இரத்த ஓட்டம் நிறுத்தப்பட்டது. மாரடைப்பு அவரது உயிரைப் பறித்தது. பாடகருக்கு இடது பிரதான கரோனரி தமனியில் 80 சதவீதம் அடைப்பு இருந்தது மற்றும் பல்வேறு தமனிகள் மற்றும் துணை தமனிகளில் சிறிய அடைப்பு இருந்தது. எந்த தடையும் 100 சதவீதம் இல்லை." என கூறியுள்ளார். அதோடு உடனடியாக கேகேவுக்கு சிபிஆர் கொடுத்திருந்தால் அவர்  உயிருடன் இருந்திருப்பார் என்று மருத்துவர்  கூறினார். 

click me!

Recommended Stories