சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ், ஸ்ரீகாந்த், சங்கீதா என பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். இப்படம் ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தயாராக உள்ளது. சென்னையில் முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து சில வாரங்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் ஒரு முக்கிய ஷெட்யூலை முடித்துள்ளனர். இதையடுத்து இன்று 'தளபதி 66' சென்னை ஷெட்யூல் இன்று தொடங்குகிறது என்று சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.