மீண்டும் இணைந்த சூப்பர் ஹிட் ஜோடி...ரஜினியுடனான புகைப்படத்தை பகிர்ந்த குஷ்பூ

Published : Oct 29, 2022, 02:15 PM IST

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திடீரென சந்தித்த குஷ்பூ, அது குறித்தான புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

PREV
16
மீண்டும் இணைந்த சூப்பர் ஹிட் ஜோடி...ரஜினியுடனான புகைப்படத்தை பகிர்ந்த குஷ்பூ
kushpoo

90களில் சூப்பர் ஹிட் நாயகியாக இருந்தவர் குஷ்பூ. தர்மத்தின் தலைவன் என்னும் படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமாகி இருந்த இவர் தமிழில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மொத்தம் 200க்கும் மேற்பட்ட படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்.  

26

வருஷம் 16, வெற்றி விழா, கிழக்கு வாசல், தாலாட்டு, பாடவா, மைக்கேல் மதன காமராஜன், சின்னத்தம்பி, மன்னன் சிங்காரவேலன், அண்ணாமலை, உத்தம புருஷன் என அன்றைய முன்னணி ஹீரோக்களான கமல், ரஜினி, பிரபு உள்ளிட்டோருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இதற்காக குஷ்புவிற்கு கோயில் கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

36

ரசிகர் பட்டாளத்தை அதிகமாக கொண்டுள்ள குஷ்பூ, ரஜினியுடன் "மன்னன், அண்ணாமலை சமீபத்தில் அண்ணாத்த உள்ளிட்ட பல படங்களில் தோன்றியுள்ளார். இவர்களது ஜோடி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்தியிருந்தது. அண்ணாமலையில் வரும் குஷ்புவின் நடிப்பு ரசிகர்களை வெகுவாகவே கவர்ந்திருந்தது.

 

46

கொண்டையில் தாழம்பூ பாடலை பாடாதவர்களே இருக்க முடியாது என்னும் அளவிற்கு குஷ்பூ கவர்ந்து இழுத்து இருந்தார். இறுதியாக ரஜினிகாந்த் நடித்த அண்ணாதுரை படத்தில் காமியோ ரோலில் குஷ்பூ வந்து ரசிகர்களை மீண்டும் உற்சாகப்படுத்தினர். 

56

தற்போது விஜயின் வாரிசு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் குஷ்பூ அதோடு தனது கணவருடன் சேர்ந்து தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வரும் இவர் அதன் மூலம் பல படங்களை தயாரித்து வருகிறார். தற்போது சுந்தர் சி இயக்கி வரும் காபி வித் காதலை இவர் தான் தயாரிக்கிறார்.

66
kushpoo

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திடீரென சந்தித்த குஷ்பூ, அது குறித்தான புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தோடு: ஒரே ஒரு சூப்பர் ஸ்டாருடன் ஒரு சாதாரண சந்திப்பு. தேநீர் மற்றும் சிரிப்புடன் இருக்கும்போது அது மிகுந்த மகிழ்ச்சியையும் அளிக்கிறது. உங்கள் பொன்னான நேரத்திற்கு நன்றி சார். உங்கள் மதிப்பு மிக்க நிறுவனத்தில் எப்போதும் இருப்பது போன்ற மகிழ்ச்சி நீங்கள் ஆச்சரியமாக இருக்கிறீர்கள் என்று சொல்ல வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories