தப்பித்த கோலிவுட்... டோலிவுட், பாலிவுட்டை கதிகலங்க வைத்த ராக்கி பாய் - KGF 2 உடன் மோதிய படங்களெல்லாம் ஃபிளாப்

Published : May 10, 2022, 12:31 PM IST

KGF 2 : யாஷ் நடித்த கே.ஜி.எஃப் 2 படத்தின் வெற்றியால் டோலிவுட், பாலிவுட் போன்ற திரையுலகம் கடும் இழப்பை சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

PREV
15
தப்பித்த கோலிவுட்... டோலிவுட், பாலிவுட்டை கதிகலங்க வைத்த ராக்கி பாய் - KGF 2 உடன் மோதிய படங்களெல்லாம் ஃபிளாப்

யாஷ் - பிரசாந்த் நீல் கூட்டணியில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான கே.ஜி.எஃப் படத்துக்கு கிடைத்த வரவேற்பால், அதன் இரண்டாம் பாகம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து இருந்தது. அந்த எதிர்பார்ப்பையெல்லாம் பூர்த்தி செய்யும் விதமாக கடந்த மாதம் வெளியான கே.ஜி.எஃப் 2 திரைப்படம் அனைத்து மொழிகளிலும் பிரம்மாண்ட வெற்றியை ருசித்துள்ளது. இப்படத்தின் வருகையால் டோலிவுட், பாலிவுட் போன்ற திரையுலகம் கடும் இழப்பை சந்தித்துள்ளது.

25

சின்னாபின்னமான பாலிவுட் படங்கள்

கே.ஜி.எஃப் 2 படத்திற்கு அதிகம் எதிர்பார்ப்பு இருந்தது இந்தியில் தான். இதனை கருத்தில் கொண்டு அங்கு இப்படத்திற்கு போட்டியாக ரிலீசாக இருந்த ஜெர்ஸி திரைப்படத்தின் ரிலீசை ஒரு வாரம் தள்ளி வைத்தனர். அப்படி தள்ளிவைத்தும் அப்படம் அங்கு பாக்ஸ் ஆபிஸில் மரண அடி வாங்கியது. இதையடுத்து கடந்த மாத இறுதியில் அஜய் தேவ்கன் நடிப்பில் வெளியான ரன்வே படமும் ஃபிளாப் ஆனதால் கே.ஜி.எஃப் 2 அங்கு சிங்கிளாக வசூல் வேட்டை ஆடி வருகிறது. இப்படம் இந்தியில் மட்டும் 400 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

35

கதிகலங்கிப்போன டோலிவுட்

தெலுங்கில் கடந்த மார்ச் மாதம் வெளியாகி சக்கைப்போடு போட்ட ராஜமவுலியின் ஆர்.ஆர்.ஆர் படம், கே.ஜி.எஃப் 2-வின் வருகையால் பெரும்பாலான திரையரங்குகளில் இருந்து தூக்கப்பட்டது. இதையடுத்து 2 வாரத்துக்கு கே.ஜி.எஃப் 2 வுக்கு போட்டியாக எந்த தெலுங்கு படமும் வெளியிடப்படவில்லை. கடந்த மாத இறுதியில் சிரஞ்சீவி, ராம்சரண் நடித்த ஆச்சார்யா படம் பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டது. அப்படம் படு மோசமாக இருந்ததால், ஓரிரு நாட்களிலேயே பெரும்பாலான திரையரங்குகளில் இருந்து தூக்கப்பட்டு மீண்டும் கே.ஜி.எஃப் 2 ஆக்கிரமித்தது. ஆச்சார்யா படம் 50 கோடிக்கு மேல் நஷ்டமடைந்ததாக கூறப்படுகிறது.

45

ஆறுதல் தந்த கோலிவுட்

கே.ஜி.எஃப் 2 படத்தின் வருகையால எந்தவித சேதாரமும் இன்றி தப்பித்தது கோலிவுட் மட்டும் தான். ஆரம்பம் முதலே கே.ஜி.எஃப் 2 படம் பின்னடைவை சந்தித்த ஒரே மாநிலம் தமிழ்நாடு மட்டும் தான். ஏனெனில், இப்படத்துக்கு போட்டியாக விஜய்யின் பீஸ்ட் வெளியானதால், கே.ஜி.எஃப் 2-வுக்கு குறைந்த அளவிலான தியேட்டர்களே ஒதுக்கப்பட்டன. அதுமட்டுமின்றி பீஸ்ட் திரைப்படம் மோசமான விமர்சனங்களை பெற்றாலும் பாக்ஸ் ஆபிஸில் 250 கோடிக்கு மேல் வசூலித்தது.

55

அதேபோல் அண்மையில் வெளியான காத்துவாக்குல ரெண்டு காதல் படமும் கே.ஜி.எஃப் 2-வால் எந்தவித பாதிப்பையும் சந்திக்காமல், வசூலை வாரிக்குவித்தது. இப்படம் வெளியான 4 நாட்களிலேயே பட்ஜெட்டை விட அதிகம் வசூலித்தது. கே.ஜி.எஃப் 2 படத்துக்கு தற்போது காட்சிகள் அதிகரிக்கப்பட்டு உள்ளன. இதனால் இப்படம் தமிழ்நாட்டில் மட்டும் 100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது.

இதையும் படியுங்கள்... Kamalhaasan : முதன்முறையாக அனிருத் இசையில் பாடிய கமல்... விக்ரம் படத்தில் காத்திருக்கும் தரமான சம்பவம்

Read more Photos on
click me!

Recommended Stories