தமிழ் புத்தாண்டை ஒட்டி இரண்டு பிரம்மாண்ட படங்கள் ரிலீசாக உள்ளன. அதன்படி நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படமும், யஷ் நடித்துள்ள கே.ஜி.எஃப் 2 படமும் அடுத்தடுத்த நாளில் திரைகாண உள்ளன. இந்த இரண்டு படங்களும் பான் இந்தியா படங்களாக ரிலீசாக உள்ளன. அதனால் இதற்கான எதிர்பார்ப்பு அனைத்து மொழிகளிலும் அதிகரித்த வண்ணம் உள்ளன.