பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஓடிடிக்கென பிரத்யேகமாக நடத்தப்பட்டு வருகிறது. சிம்பு தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சி கடந்த ஜனவரி மாதம் தொடங்கப்பட்டது. 70 நாட்கள் மட்டுமே நடத்தப்பட உள்ள இந்த நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. இறுதிவாரத்தில் அபிராமி, ஜூலி, ரம்யா பாண்டியன், தாமரை, பாலா, நிரூப் ஆகியோர் வீட்டில் இருந்தனர்.