'தனுஷ் என்னை காதலித்தார்'..புது குண்டை போடும் பிரபல நடிகை...

Kanmani P   | Asianet News
Published : Apr 07, 2022, 05:13 PM IST

'வட சென்னை படத்தில் நடித்த போது தனுஷே என்னை லவ் பண்ணிட்டார்' என்னை பார்த்ததும் அவர் லவ் பண்ணிடுவாரு என்று கூறியுள்ளார்.

PREV
18
'தனுஷ் என்னை காதலித்தார்'..புது குண்டை போடும் பிரபல நடிகை...
dhanush

 தந்தை கஸ்தூரிராஜா இயக்கத்தில் முதன்முறையாக துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் அறிமுகமான தனுஷ் தற்போது முன்னணி நாயகர்களின் வரிசையில் முதல் வரிசையில் இடம் பிடித்துள்ளார். ஹாலிவுட்,கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என கலக்கி  வருகிறார் தனுஷ்.

28
dhanush

படங்களில் வெற்றி கண்டாலும் சொந்த வாழ்க்கையில் பல சிக்கல்களை சந்தித்து வருகிறார் தனுஷ். நட்சத்திர தம்பதிகளாக வலம் வந்த தனுஷ் - ஐஸ்வர்யா சமீபத்தில் விவாகரத்தை அறிவித்தனர்..இவர்களின் முடிவு ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

38
dhanush

மகளின் இந்த முடிவு ரஜினியை  மிகவும் மன அழுத்தத்திற்கு ஆளாக்கியுள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே தனது இரண்டாவது மகளின் வாழ்க்கையில் ஏகப்பட்ட சிக்கலில் இருந்து சமீபத்தில் மீண்டுள்ள ரஜினி..தனது முதல் மகளின் வாழ்க்கை நினைந்து மனம் நொந்துள்ளராம். 

48
dhanush

இருவருக்கும் ரஜினி பலமுறை அட்வைஸ் கொடுத்ததும் முடிவில் இருந்துஇ மாறுவதாக தெரியவில்லை என்பதால் அவர்கள் நோக்கத்திற்கு விட்டு விட்டாராம் ரஜினி. அதோடு தனுஷ் குடும்பமும் பல சமாதானங்களை பேசியும் பயனில்லாமல் போனதாக தெரிகிறது.

58
dhanush

பிரிவுக்கு பின் தனுஷும், ஐஸ்வர்யாவும், தங்களது வேலைகளில் பிஸியாக உள்ளனர்.  தற்போது  வாத்தி, செல்வராகவன் இயக்கும் நானே வருவேன் போன்ற படங்களில் தனுஷ் பிஸியாக இருக்க அதே வேளையில் நடிகை ஐஸ்வர்யாவும் இயக்குனராக சினிமாவில் மீண்டும் ரீ-எண்ட்ரி கொடுத்துள்ளார்.

68
dhanush

அவ்வப்போது மகன்களை சந்தித்து வரும் தனுஷ் சமீபத்தில்  சென்னையில் நடைபெற்ற இளையராஜாவின் இசைக் கச்சேரியில் தன் மகன்களுடன் வந்து கலந்துகொண்டார். 

78
Dhanush

அதோடு சமீபத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் ம்யூசிக் வீடியோ வெளியான போது தோழிக்கு வாழ்துக்கள் என பதிவிட்டிருந்தார் தனுஷ். இதற்கு ஐஸ்வர்யாவும் நன்றி தெரிவித்தார். இந்நிலையில் தனுஷ் குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் பேசியிருப்பது வைரலாகி வருகிறது.

88
aishwarya rajesh

சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ்..வாடா சென்னையில் நடிக்கும் போது  ஒரு ஸ்பெஷலான ஃபீல் எனக்கு ஏற்பட்டது. என் கதாபாத்திரத்தை பார்த்தாலே லவ் பண்ற மாதிரி இருக்கும். படத்தில் தனுஷே என்னை லவ்வே பண்ணிட்டாரு. என்னை பார்த்ததும் அவர் லவ் பண்ணிடுவாரு என கூறி குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories