3 வருஷமா என்ன பண்ணுனீங்க?..சிவகார்த்திகேயனை வெளுத்து வாங்கிய நீதிபதிகள்..

Kanmani P   | Asianet News
Published : Apr 07, 2022, 01:31 PM IST

சம்பள பாக்கியை பெற்று தர வேண்டும் என சிவகார்த்திகேயன் தொடுத்துள்ள வழக்கில் நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளனர்.

PREV
18
3 வருஷமா என்ன பண்ணுனீங்க?..சிவகார்த்திகேயனை வெளுத்து வாங்கிய நீதிபதிகள்..
Mr Local
Mr Local
28
mr.local

ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்திருந்த இந்த படத்தை ஞானவேல் ராஜ 35 கோடி செலவில் தயாரித்திருந்தார். மிஸ்டர் லோக்கல் படத்திற்கு முன்னதாக சிவகார்த்திகேயன் நடித்த வேலைக்காரன் வெற்றி பெற்ற நிலையில் இந்த படம் போதுமான வரவேற்பை பெறவில்லை.

38
mr.local

பொதுவாக நாயகியால் அவாய்ட் செய்யப்படுவது போன்ற கதையம்சம் ரசிகர்களை ஈர்ப்பதில்லை. இந்த படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நாயகியாக நடித்திருந்தாலும் போதுமான டிவிஸ்ட், கிளைமேக்ஸ் இல்லை என்கிற விமர்சனங்கள் எழுந்தன.

48
mr local

நகைச்சுவை காதல் படமாக இருந்த போதிலும் ரசிகர்களுக்கு போதுமான மன திருப்தியை தராத இந்த படம் தனது பட்ஜெட்டை வ\விட குறைவாகவே வசூல் செய்தது.  

58
mr.local

படம் மிக குறைவான வசூலை தந்ததால் நஷ்டத்தில் ஏற்பட்டதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது. அதோடு சிவகார்த்திகேயனுக்கு சம்பள பாக்கியும், படத்திற்கான வரியும் இதுவரை செலுத்தவில்லை என்றும் சொல்லப்படுகிறது. 

68
Sivakarthikeyan

படம் வெளியாகி 3 வருடம் கழித்து சிவகார்த்திகேயன் தனது சம்பள பாக்கி 4 கோடியை பெற்று தரும்படி உயர்நீதிமன்றத்தில் தயாரிப்பாளர் மீது புகார் கொடுத்துள்ளார்.

78
gnanavel raja

இது குறித்து பதில்மனு அளித்த ஞானவேல் ராஜா..சிவகார்த்திகேயன் வற்புறுத்தலால் எடுக்கப்பட்ட மிஸ்டர் லோக்கல் படித்தால் தனக்கு 20 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், உண்மை தகவல்களை மறைத்து தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் தாக்கல் செய்துள்ள மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டுமெனவும் தயாரிப்பாளர் கோரியுள்ளார்.

88
sivakarthikeyan

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக இன்று நடைபெற்ற விசாரணையின் போது..நீதிபதிகள் சரமாரியான கேள்விகளை எழுப்பியுள்ளனர்.  வாதத்தை கேட்டுவிட்டு பேசிய நீதிபதிகள் ; கடந்த மூன்று வருடங்களாக ஏன் சிவகார்த்திகேயன் சம்பள பாக்கி கேட்டு வழக்கு தொடரவில்லை, TDS தொடர்பாக வருமான வரித்துறை வழக்கு நிலுவையில் உள்ள போது மற்றோரு வழக்கு தொடர என்ன காரணம் உள்ளிட்ட கேள்விகளை கேட்டுள்ளனர்.

Read more Photos on
click me!

Recommended Stories