KGF 2 : காத்துவாங்கும் பீஸ்ட்... கலெக்‌ஷனை அள்ளும் கே.ஜி.எஃப் 2 - முதல் நாளை விட 10-வது நாள் அதிக வசூலாம்

Published : Apr 25, 2022, 08:42 AM IST

KGF 2 : கே.ஜி.எஃப் 2 படத்தை தமிழ்நாட்டில் வெளியிட்ட டிரீம் வாரியர் பிக்சர்ஸின் எஸ்.ஆர்.பிரபு. இப்படம் தமிழகத்தில் அமோக வரவேற்பை பெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.

PREV
14
KGF 2 : காத்துவாங்கும் பீஸ்ட்... கலெக்‌ஷனை அள்ளும் கே.ஜி.எஃப் 2 - முதல் நாளை விட 10-வது நாள் அதிக வசூலாம்

யாஷ் - பிரசாந்த் நீல் கூட்டணியில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியாகி பிரம்மாண்ட வெற்றியை ருசித்த படம் கே.ஜி.எஃப். தற்போது அதே கூட்டணியில் கே.ஜி.எஃப் 2-ம் பாகம் வெளியாகி உள்ளது. தமிழ் புத்தாண்டன்று ரிலீஸான இப்படம் வெளியான அனைத்து மொழிகளிலும் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.

24

அதேபோல் வசூலிலும் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. இப்படம் பிற மொழிகளில் அதிக திரையரங்குகளில் வெளியானாலும், தமிழ்நாட்டில் குறைந்த அளவிலான தியேட்டர்களில் மட்டுமே ரிலீஸ் செய்யப்பட்டது. ஏனெனில் இப்படத்துக்கு போட்டியாக விஜய் நடித்த பீஸ்ட் படம் ரிலீசானதால் அப்படத்துக்கே அதிக அளவில் திரையரங்குகள் ஒதுக்கப்பட்டன.

34

இருப்பினும் பீஸ்ட் திரைப்படம் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்ததால், கொஞ்சம் கொஞ்சமாக தமிழகத்திலும் ஆக்கிரமிக்க தொடங்கியது கே.ஜி.எஃப் 2. கடந்த இரு தினங்கள் விடுமுறை நாட்கள் என்பதால் இப்படத்துக்கான தியேட்டர்கள் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டு திரையிடப்பட்டன.

44

கே.ஜி.எஃப் 2 படத்தை தமிழ்நாட்டில் வெளியிட்ட டிரீம் வாரியர் பிக்சர்ஸின் எஸ்.ஆர்.பிரபு. இப்படம் தமிழகத்தில் அமோக வரவேற்பை பெற்று வருவதாகவும், தமிழ்நாட்டில் இப்படத்தின் முதல் நாள் வசூலை விட 10 வது நாள் வசூல் அதிகம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ராக்கி பாயின் வசூல் வேட்டையை தடுக்க முடியவில்லை என அவர் மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். 

இதையும் படியுங்கள்... Lokesh kanagaraj : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்த சூர்யா - கார்த்தி... மாஸ்டர் இயக்குனரின் மாஸ் சர்ப்ரைஸ்

Read more Photos on
click me!

Recommended Stories