தமிழ் திரையுலகில் நட்சத்திர ஜோடிகளாக ஜொலிப்பவர்கள் அஜித் - ஷாலினி தம்பதி. வளரும் நடிகராக இருந்த அஜித் அமர்க்களம் படத்தில் தன்னுடன் நடித்த ஷாலினி மீது காதலில் விழுந்தார்.
29
Ajith - shalini
ஷாலினி குழந்தை நட்சத்திரமாக தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மோ;மொழிகளில் கிட்டத்தட்ட 55 படங்களில் வெற்றிகரமாக குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.
39
Ajith - shalini
பின்னர் 7 வருட இடைவேளைக்கு பிறகு ஷாலினி நாயகியாக என்ட்ரி கொடுத்து ஷாலினி மலையாளம் மற்றும் தமிழில் 12 படங்களில் மட்டுமே நாயகியாக தோன்றினார்.
49
Ajith - shalini
விஜய் அஜித், மாதவன் என முன்னணி நாயகர்களுடன் ஷாலினி முன்னணி பாத்திரங்களில் நடித்த படங்களில் பெரும்பான்மையான படங்கள் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் கொடுத்தது.
59
Ajith - shalini
அதிலும் மாதவனுடன் 2000 அலைபாயுதே படத்திற்காக சிறந்த நடிகைக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருது மற்றும் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது க்கு பரிந்துரை செய்யப்பட்டார்.
69
Ajith - shalini
முன்னதாக 1999-ல் அமர்க்களம் படப்பிடிப்பில் அஜித்துடன் காதலில் விழுந்த ஷாலினி இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 2000-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.
79
Ajith - shalini
திருமணத்திற்கு பிறகே அலைபாயுதே மற்றும் பிரசாந்துடன் பிரியாத வரம் வேண்டும் உள்ளிட்ட இரு படங்களில் நடித்தார். இந்த படங்களுக்கு பிறகு சினிமாவில் இருந்து விலகினார் ஷாலினி.
89
Ajith - shalini
அஜித்குமார்-ஷாலினி தம்பதிக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். கணவனுக்கு உறுதுணையாக வெற்றிகரமாக 22 வருட திருமண பந்தத்தில் ஜொலித்து வருகிறார் ஷாலினி.
99
Ajith - shalini
இந்த தம்பதிகள் தங்களது 22 வது திருமண நாளை கொண்டாடி வருகின்றனர். அவர்களுக்கு ரசிகர்கள் வாழ்த்து கூறி வருவதுடன் முந்தைய புகைப்படங்களையும் வைரலாகியுள்ளது.