“மாஸ்டர்” படத்திற்கு மற்றொரு சிக்கல்... பிலிம் சேம்பரின் அதிரடி முடிவால் பின்னடைவு...!

First Published Jan 7, 2021, 1:44 PM IST

கேரள பிலிம் சேம்பர் எடுத்துள்ள அதிரடி முடிவு விஜய் நடிப்பில் வெளியாக உள்ள மாஸ்டர் திரைப்படத்திற்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது.

பொங்கல் விருந்தாக விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் ஜனவரி 13ம் தேதியும், சிம்புவின் ஈஸ்வரன் திரைப்படம் ஜனவரி 14ம் தேதியும் வெளியாக உள்ளது. இதையடுத்து திரையுலகினரின் நீண்ட நாள் கோரிக்கையான தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக அரசு அனுமதி அளித்தது.
undefined
ஆனால் கொரோனா தடுப்பு நடைமுறைகளை சுட்டிக்காட்டியுள்ள மத்திய அரசு, திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி என்ற அறிவிப்பை திரும்ப பெற அறிவுறுத்தியுள்ளது. இதனால் மாஸ்டர் திரைப்படம் தியேட்டர்களில் வெளியாகுமா? என்பதே மிகப்பெரிய சந்தேகமாக மாறியுள்ளது.
undefined
தமிழகத்தில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி அளித்ததை தொடர்ந்து கேரளாவிலும் 100 சதவீத பார்வையாளர்களை தியேட்டர்களில் அனுமதிக்க வேண்டுமென மலையாள திரையுலகினர் கோரிக்கை வைத்து வந்தனர்.
undefined
மேலும் கொரோனா காலத்தில் வரி விலக்கு, மின் கட்டண சலுகை, ஜி.எஸ்.டி கேளிக்கை வரி, செஸ் வரி செலுத்துதல் ஆகியவற்றில் சலுகை கிடைக்காமல் தியேட்டர்களை திறப்பதால் லாபம் இல்லை என முடிவு செய்த கேரள பிலிம் சேம்பர் தியேட்டர்களை மூடியே வைத்துள்ளது.
undefined
கேரளாவில் 200 தியேட்டகளில் படத்தை திரையிட முடிவு செய்திருந்த நிலையில், பிலிம் சேம்பர் எடுத்துள்ள அதிரடி முடிவு மாஸ்டர் படத்திற்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது.
undefined
click me!