Keneeshaa - Ravi Mohan Break Up : நடிகர் ரவி மோகன் பாடகி கெனிஷாவை உருகி உருகி காதலித்து வந்த நிலையில், அவர் சென்னையை விட்டு செல்வதாக கூறி பதிவு ஒன்றை போட்டிருக்கிறார். அதைப்பற்றி பார்க்கலாம்.
நடிகர் ரவி மோகன் விவகாரத்தில் தொடந்து விமர்சனங்களை எதிர்கொண்டு வந்த கெனிஷா தற்போது அவரைவிட்டு விலகுவதாக உருக்கமாக பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், சென்னை நகரத்தை விட்டு வெளியேறுகிறேன். இசை, தெரபி சிகிச்சை இதுவரை நான் வாழ்ந்த வாழ்க்கை அனைத்தையும் விட்டுவிடுகிறேன். சோசியல் மீடியா தொல்லை, மனஅழுத்தம் போன்ற காரணங்களால் சமூக வலைதளங்களில் இருந்து விலகுகிறேன். ப்ரெண்ட்ஸ், ஃபேமிலி மற்றும் ரசிகர்கள் தனக்கு தேவையான தனியுரிமையை வழங்க வேண்டும். இந்த விஷயம் பற்றி நான் அதிகமாக பேசிவிட்டேன், இதுக்கு மேல, என்னை நல்லவளாக நிரூபிக்க முயற்சி செய்ய மாட்டேன். இனிமேல் அமைதியாக விலகி செல்கின்றேன்.
25
நான் தோற்றுவிட்டேன்
மன உளைச்சலில் இருந்த ஒருவரை காப்பாற்றவும், அவருக்கு சப்போர்ட் ஆக இருக்கவும் முயன்றேன். ஆனால் நீங்கள் ஏற்கனவே அவரைப் பற்றி ஒரு முடிவு செய்துவைத்து இருக்கிறீர்கள். இந்த உலகத்தில் நல்லவர்களை விட பொய்யர்கள், சூழ்ச்சி செய்பவர்கள், ஏமாற்றுபவர்களையே உலகம் அதிகம் நம்புகிறது. அவரை இப்போது இந்த உலகத்திடமே விட்டுவிடுகிறேன். இனி எந்த விளக்கமும், பாதுகாப்பும், போராட்டமும் இருக்கவே இருக்காது. உண்மையான அன்பு, விஸ்வாசம் ஆகியவற்றை உலகம் மதிக்கவில்லை. நீங்கள் விரும்பியது ஒருவழியாக நடந்துவிட்டது. கடைசியாக பெண் வாதம் ஜெயித்து விட்டது. ஆனால் என்னுடைய மகிழ்ச்சி தோற்றுவிட்டது என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
35
18 வயதில் திருமணம்
நடிகர் ரவி மோகனுக்கும் தனக்கும் தொடர்புபடுத்தி வரும் சர்ச்சைகளுக்குப் பாடகி கெனிஷா பிரான்சிஸ் விளக்க வீடியோ வெளியிட்டு, தற்போது அவருடைய சமூக வலைதளப் பக்கத்தில் இருந்து நீக்கி உள்ளார். அந்த வீடியோவில் அவர் பேசியதாவது : "ஏன் நான் அமைதியாக இருக்கிறேன் என்று எல்லோரும் கேட்கிறார்கள். கடைசியாக, என்னைப் பற்றி நானே சொல்கிறேன். ஒருவேளை இதுதான் என்னுடைய கடைசி விளக்கமாக இருக்கலாம். நான் என் பெற்றோருக்கு ஒரே மகள். என் அப்பாவும் அம்மாவும் இப்போது இந்த உலகில் இல்லை. எனக்கு 4 வயதாக இருக்கும்போது, சொந்தக்காரர் ஒருவராலேயே பாலிய*ல் துன்புறுத்தலுக்கு ஆளானேன். 18 வயதில் எனக்குத் திருமணம் ஆனது. ஆனால், அது வெறும் நான்கு மாதங்கள் மட்டுமே நீடித்தது. என் கணவருக்கு வேறு பெண்களுடன் தொடர்பு இருந்தது. அந்த உறவு மிகவும் நரகமாக மாறியது. மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் நான் பட்ட கஷ்டத்தில், என் கர்ப்பம் கலைந்துவிட்டது. இதெல்லாம் எனக்கு 19-20 வயதில் நடந்தது."
"முதலில் என் அம்மா இறந்துவிட்டார். நான்கு வருடங்கள் கழித்து அப்பாவும் போய்விட்டார். அதன்பிறகு, கிட்டத்தட்ட பத்து வருடங்கள் நான் தனியாகத்தான் வாழ்ந்தேன். என் கடந்த காலத்தை நோண்டி எடுத்து கிண்டல் செய்பவர்கள் இருக்கிறார்கள். ஆமாம், ஒரு இரவுக்கு 500 ரூபாய் வாங்கிக்கொண்டு பார்களில் பாடித்தான் என் கெரியரை ஆரம்பித்தேன். இன்று அதைவிட அதிகமாக சம்பாதிக்கிறேன். இப்போது எல்லோரும் என்னைக் குறிவைக்கிறார்கள். என் தனிப்பட்ட வாழ்க்கையைத் தெரிந்துகொள்ள பெங்களூருக்கே சில டிடெக்டிவ்களை அனுப்பினார்கள். என் அப்பாவை நான் முதியோர் இல்லத்தில் விட்டதாகக் கூட கதை கட்டிவிட்டார்கள். அவர்கள் மனிதாபிமானமற்றவர்கள்."
55
நான் யாருடைய குடும்பத்தையும் பிரிக்கவில்லை
"'குடும்பத்தைக் கெடுத்தவள்' என்று எல்லோரும் என்னைச் சொல்கிறார்கள். கர்ப்பத்தில் தன் குழந்தையை இழந்த ஒரு பெண், இன்னொருவரை அவருடைய குடும்பத்தில் இருந்தோ, குழந்தைகளிடம் இருந்தோ பிரிப்பார் என்று உங்களுக்குத் தோன்றுகிறதா? ரவி மோகன் மனதளவில் மிகவும் உடைந்து போயிருந்த நிலையில்தான் என்னிடம் உதவி கேட்டு வந்தார். ஒரு தெரபிஸ்ட்டாக, அவருக்குத் தேவையான எல்லா உதவிகளையும் நான் செய்தேன். அவர் குடும்பத்துடன் இருந்த பிரச்சினையை சரிசெய்யச் சொல்லிதான் நான் சொன்னேன். ஆனால், அதற்கு முன்பே ரவி மோகன் மனதளவில் தன் குடும்பத்தை விட்டு விலகி இருந்தார். அந்த சமயத்தில்தான் நாங்கள் நண்பர்களானோம். இன்றும் அப்படித்தான் இருக்கிறோம். மற்றபடி, நான் யாருடைய குடும்பத்தையும் பிரிக்கவில்லை. எனக்கும் அந்தத் தேவையும் இல்லை. மக்கள்தான் இந்த உறவைத் தவறாகப் புரிந்துகொண்டார்கள்." என கூறினார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.