3 நாளில் 19 கோடி! பட்ஜெட்டைத் தூக்கிச் சாப்பிட்ட கென் கருணாஸின் 'யூத்'! பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய சம்பவம்!

Published : Mar 22, 2026, 12:41 PM IST

நடிகர் கென் கருணாஸ் இயக்கி நடித்த 'யூத்' திரைப்படம் 2026-ன் மிகப்பெரிய ஹிட் படங்களில் ஒன்றாக மாறியுள்ளது. முதல் மூன்று நாட்களில் ரூ.19 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது.

PREV
15
Youth movie box office collection 2026 Day 3 Report

இளம் நடிகர் கென் கருணாஸ், முதல்முறையாக இயக்கி, ஹீரோவாகவும் நடித்துள்ள 'யூத்' படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தப் படம் முழுக்க முழுக்க இளைஞர்கள் கொண்டாட்டமாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். பள்ளி, கல்லூரி காலத்து நினைவுகள், காதல், நட்பு, அதோடு குடும்ப உறவுகளின் எமோஷன்ஸ் என அனைத்தும் கலந்த ஒரு பக்கா ஃபன் பேக்கேஜாக இந்தப் படம் வந்துள்ளது.

25
Ken Karunas Youth movie box office collection 2026

“coming-of-age” கதை வகையை சேர்ந்த படம் தான் யூத். இளமையில் இருக்கும் ஒரு மாணவன் வாழ்க்கையின் உண்மைகளை புரிந்து கொள்ளும் பயணத்தை மையமாகக் கொண்டு கதை நகர்கிறது. குடும்ப அழுத்தம், காதல், நண்பர்கள், தவறான முடிவுகள் போன்ற பல அம்சங்கள் கதையில் முக்கிய பங்கு வகிக்கின்றன. வாழ்க்கையில் சரியான பாதையை தேர்வு செய்ய முடியாமல் தடுமாறும் இளைஞனின் மனநிலையை இந்த படம் நிஜத்திற்கு அருகாக காட்டுகிறது.

ஜனனியை ஒழிக்கத் துடிக்கும் தேவசகாயம்! நடுரோட்டில் நடக்கப்போகும் விபரீதம்? திடுக்கிடும் திருப்பத்தில் எதிர்நீச்சல் தொடர்கிறது!"

35
Youth movie day 3 collection report Tamil

கதையின் முக்கிய பாத்திரமான பிரவீன் தனது பள்ளி வாழ்க்கையிலேயே காதலை தேடுகிறான். பல உறவுகள், தோல்விகள், மன வேதனைகள் ஆகியவற்றை அனுபவித்த பின் தான் உண்மையான காதலும் வாழ்க்கையின் மதிப்பும் என்ன என்பதை அவன் புரிந்து கொள்கிறான். இந்த அனுபவங்கள் அவனின் எண்ணங்களையும், முதிர்ச்சியையும் மாற்றுகின்றன. படத்தின் சிறப்பு, இளைஞர்களின் உணர்வுகளை நேர்த்தியாகவும் இயல்பாகவும் வெளிப்படுத்துவதிலேயே உள்ளது. குறிப்பாக, காதல் மற்றும் நட்பு சம்பந்தமான காட்சிகள் இன்றைய தலைமுறைக்கு நெருக்கமாக அமைந்துள்ளன. நகைச்சுவை, உணர்ச்சி, மற்றும் சிந்தனை தூண்டும் தருணங்கள் கலந்து அமைந்துள்ளதால், படம் ஒரு முழுமையான பொழுதுபோக்கு அனுபவமாக அமைகிறது.

45
Is Ken Karunas Youth a hit or flop?

மேலும், இசையமைப்பாளர் ஜீ.வி. பிரகாஷ் வழங்கிய பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்தின் உணர்வுகளை மேலும் வலுப்படுத்துகின்றன. மொத்தத்தில், யூத் என்பது இளமையின் குழப்பங்கள், கனவுகள் மற்றும் வாழ்க்கை பாடங்களை சுவாரஸ்யமாக சொல்லும் ஒரு சிறந்த திரைப்படமாக பார்க்கப்படுகிறது. இது இளைஞர்களுக்கு மட்டுமல்லாமல், பெற்றோர்களுக்கும் ஒரு நல்ல விமர்சனத்தை வழங்கி வருகிறார்கள்

இடம் வாங்கி வீடு கட்டிய கார்த்திக் – பிரம்மாண்ட ஆடம்பரமான வீட்டை ரேவதிக்கு திருமண நாள் பரிசாக கொடுக்கும் கார்த்திக்!

55
Ken Karunas directorial debut Youth results

இளம் ரசிகர்களிடையே இந்த படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. வெளியான சில நாட்களிலேயே படம் நல்ல வசூலை பெற்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 3 நாட்களில் யூத் திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 3 நாட்களில் இப்படம் உலகளவில் ரூ. 19 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களிலும் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories