நடிகர் கருணாஸின் மகன் கென் கருணாஸ் இயக்கி, ஹீரோவாக நடித்த 'யூத்' திரைப்படம் வசூலில் புதிய சாதனை படைத்துள்ளது. அதைப்பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
தமிழ்ல இளம் நடிகரா இருக்குற கென் கருணாஸ், முதல் முறையா டைரக்ட் பண்ண 'யூத்' படம் சூப்பர் ஹிட் ஆகியிருக்கு. இந்தப் படத்துல அவரே ஹீரோவாகவும் நடிச்சிருக்கார். மலையாளம் மற்றும் பாலிவுட்ல பெரிய படங்கள் ரிலீஸான மார்ச் 19-ம் தேதி தான் 'யூத்' படமும் ரிலீஸ் ஆச்சு. ஆனாலும், படத்துக்கு ரசிகர்கள் மத்தியில அமோக வரவேற்பு கிடைச்சிருக்கு. பெரிய படங்களுக்கு நடுவுல ரிலீஸான இந்த சின்ன படம், இப்போ பாக்ஸ் ஆபிஸ்ல பட்டையைக் கிளப்பிட்டு இருக்கு. வயலன்ஸ், ரத்தக் களரி எதுவும் இல்லாம, ஆரம்பத்துல இருந்து கடைசி வரைக்கும் வயிறு குலுங்க சிரிக்கிற மாதிரி ஒரு பக்கா என்டர்டெயினரா இருக்குறது தான் இந்தப் படத்தோட பெரிய ப்ளஸ்.
24
யூத் பட வசூல் சாதனை
உலக அளவுல இந்தப் படம் 50 கோடி ரூபாய் வசூல் பண்ணியிருக்கிறதா படக்குழுவே அதிகாரப்பூர்வமா அறிவிச்சிருக்காங்க. இதன்மூலம் மார்ச் மாதம் ரிலீஸ் ஆன தமிழ் படங்களில் 50 கோடி வசூல் அள்ளிய முதல் படம் என்கிற சாதனையை யூத் படைத்துள்ளது. அதேபோல் இந்த ஆண்டு பராசக்தி, தாய்கிழவிக்கு அடுத்தபடியா யூத் இந்த சாதனையை படைச்சிருக்கு. ரிலீஸ் ஆன முதல் வாரமே நல்ல வசூல் பார்த்த இந்த படம், ரெண்டாவது வாரமும் ஹவுஸ்ஃபுல் காட்சிகளா ஓடிட்டு இருக்கு. குடும்பங்களோடும், இளைஞர்களோடும் எந்த டென்ஷனும் இல்லாம ஜாலியா தியேட்டர்ல பார்த்து என்ஜாய் பண்ண முடியுறதால, இந்த சின்ன படத்துக்கு பெரிய வெற்றி கிடைச்சிருக்கு.
34
அமோக வரவேற்பை பெறும் யூத்
படத்துல மலையாளத்தோட முன்னணி நடிகரான சுராஜ் வெஞ்சாரமூட் ஒரு முக்கிய ரோல்ல நடிச்சிருக்கார். இதுவும் கேரளாவில் படம் ஹிட்டாக ஒரு முக்கிய காரணம். அவர் ஹீரோ கென் கருணாஸோட அப்பாவா நடிச்சிருக்கார். கென் மற்றும் சுராஜ் வெஞ்சாரமூட் ரெண்டு பேரோட நடிப்பு படத்துக்கு பெரிய பலம் சேர்த்திருக்கு. இளைஞர்களோட கொண்டாட்டத்தை மையமா வெச்சு இந்தப் படம் உருவாகியிருக்கு. ஸ்கூல், காலேஜ் லைஃப், அதுல நடக்குற ஜாலியான சம்பவங்கள், காதல், நட்பு, குடும்ப உறவுகளோட எமோஷன்ஸ்னு எல்லாத்தையும் கலந்து ஒரு கலர்புல் பேக்கேஜா கொடுத்திருக்காங்க. ஃபாமிலி ஃபன், ரொமான்டிக் காமெடி, ஃபீல் குட்னு எல்லா ஜானர்லயும் ரசிகர்களைக் கவர்ந்து, ஒரு முழுமையான தியேட்டர் அனுபவத்தை இந்தப் படம் கொடுக்குது.
ரசிகர்கள் மட்டுமில்லாம, விமர்சகர்கள் மத்தியிலயும் படத்துக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைச்சிருக்கு. மலையாள நடிகை அனிஷ்மா அனில்குமார் தான் படத்தோட ஹீரோயின். இவங்களோட தேவதர்ஷினி சேத்தன், பிரியான்ஷி யாதவ், மீனாட்சி தினேஷ்னு பலரும் நடிச்சிருக்காங்க. இந்த ஸ்கூல்-டீனேஜ் ரொமான்டிக் காமெடி படத்தை கென் கருணாஸே எழுதி இயக்கியிருக்கார். பார்வதா என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பா கருப்பையா சி. ராம் மற்றும் சுலோச்சனா குமார் தயாரிச்சிருக்காங்க. கென், தமிழ்ல காமெடி நடிகரா பிரபலமான கருணாஸோட மகன் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தோட பாடல்களும் சூப்பர் ஹிட். ஜி.வி. பிரகாஷ் குமார் தான் படத்துக்கு இசை அமைச்சிருக்கார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.