Keerthy Suresh : மிஷ்கின் காலை தொட்டதால் கடுப்பானாரா கீர்த்தி சுரேஷ்? சர்ச்சைக்கு அவரே கொடுத்த செம பதிலடி

Published : Nov 19, 2026, 08:27 PM IST

Keerthy Suresh Reply For Controversy : சத்யவான் சாவித்ரி பட புரொமோஷனின் போது மிஷ்கின், கீர்த்தி சுரேஷின் காலை தொட்ட வீடியோ வைரலானது. அதற்கு கீர்த்தி சுரேஷ் நச்சென்று பதிலடி கொடுத்துள்ளார்.

PREV
14
சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தை கீர்த்தி சுரேஷ்

நடிகை கீர்த்தி சுரேஷின் 'சத்யவான் சாவித்ரி' படம் நாளை வெளியாகிறது. இந்த சூழலில், அவரைப் பற்றிய ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 'சத்யவான் சாவித்ரி' பட ரிலீஸை முன்னிட்டு கீர்த்தி சுரேஷ் மிகவும் பிஸியாக இருக்கிறார். பட புரொமோஷன் பணிகளில் பிஸியாக இருக்கும் அவர், சமீபத்தில் நடந்த பிரஸ்மீட் ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது மிஷ்கின், நடிகை கீர்த்தி சுரேஷின் காலில் கையை வைத்து பேசும் வீடியோதான் அது. இது கீர்த்தி சுரேஷ் ரசிகர்களை கொந்தளிக்கச் செய்தது. ஆனால், இதுகுறித்து நடிகை கீர்த்தி சுரேஷே விளக்கம் அளித்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

24
பிரஸ்மீட்டால் வெடித்த சர்ச்சை

நவம்பர் 18ஆம் தேதி சென்னையில் 'சத்யவான் சாவித்ரி' படத்தின் பிரஸ்மீட் நடந்தது. அப்போது படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள மிஷ்கின் பேசுகையில் கீர்த்தி சுரேஷை புகழ்ந்து தள்ளினார். பேசும் வேகத்தில் கீர்த்தி சுரேஷை அவர் தொட்டார். ஓரிரு முறை கை அவர் பக்கம் வந்தபோது கீர்த்தி சுரேஷ் இயல்பாகவே இருந்தார். இந்த வீடியோவைப் பார்த்த சில நெட்டிசன்கள், கீர்த்தி சுரேஷுக்கு இது அசௌகரியமாக இருப்பதாக கமெண்ட் மற்றும் போஸ்ட் செய்யத் தொடங்கினர். அந்த வீடியோவும் இணையத்தில் வைரல் ஆனது.

34
கீர்த்தி சுரேஷ் பதிலடி

வீடியோ வைரலானதை அடுத்து கீர்த்தி சுரேஷ் தனது எக்ஸ் தள பக்கத்தில் இந்த சம்பவம் குறித்து பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில், "முதலாவதாக, என் முகத்தில் எங்கே உங்களுக்கு அசௌகரியம் தெரிந்தது? நாங்கள் அப்பா - மகள் போன்ற ஒரு பிணைப்பைப் பகிர்ந்து கொள்கிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார், நானும் சொன்னேன். அதை நீங்கள் கேட்கவில்லையா? இரண்டாவதாக, ஒருவேளை எனக்கு அசௌகரியமாகவே இருந்தது என்று வைத்துக்கொள்வோம், சினிமாவில் தொடுகிறார்கள் என்பதற்காக பொது இடத்திலும் அப்படியே செய்ய வேண்டும் என்று சொல்கிறீர்களா? பிரதர், முதலில் நீங்கள் சில விஷயங்களை சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும்" என்று ட்வீட் செய்துள்ளார்.

44
ஓம் படத்துடன் மோதும் சத்யவான் சாவித்ரி

கீர்த்தி சுரேஷ் விளக்கம் அளித்து சர்ச்சைக்கு பதிலளித்தவுடன், அவரை விமர்சித்த அந்த நபர் தனது எக்ஸ் தள பதிவை டெலிட் செய்துள்ளார். 'சத்யவான் சாவித்ரி' திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது. பாக்ஸ் ஆபிஸில் தனுஷ், மம்மூட்டி மற்றும் சாய் பல்லவி நடித்துள்ள 'ஓம் சாப்டர் 1' படத்துடன் இந்த படம் போட்டியிடுகிறது. சத்யவான் சாவித்ரி திரைப்படத்தை பிரவீன் எஸ். விஜய் இயக்கி உள்ளார். இப்படத்தில் சாருகேஷ், பால சரவணன், ஷில்பா மஞ்சுநாத் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தில் வழக்கறிஞராக நடித்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories