வெள்ளித்திரையில் முன்னணி நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தன்னுடைய நீண்ட நாள் காதலரும், பள்ளி நண்பருமான ஆண்டனி தட்டில் என்பவரை கோவாவில் கரம்பிடித்தார். இவர்களின் திருமணம், ஹிந்து முறை படியும் கிறிஸ்தவ முறைப்படியும் நடந்து முடிந்தது.
24
பேபி ஜான்:
திருமணத்திற்கு பின்னர் பாலிவுட்டில் நடித்த 'பேபி ஜான்' படத்தின் புரமோஷன் பணியில் தீவிரமாக களமிறங்கிய கீர்த்தி சுரேஷ், மாடர்ன் டிரஸ் போட்டுக்கொண்டு மஞ்சள் தாலி தெரிய வலம் வந்த வீடியோஸ் மற்றும் போட்டோஸ் வைரலானது. மேலும் மஞ்சள் கயிறு குறித்து எழுபட்ட கேள்விக்கு கூட திருமணமான பெண்களுக்கு முக்கியமான ஒன்று. இதை நான் மதிக்கிறேன். மஞ்சள் தாலி அணிந்துள்ளதை பெருமையாக கருதுவதாக பேசி இருந்தார்.
இதன் பின்னர் மஞ்சள் தாலியில் இருந்து தங்க தாலி அணிந்திருந்த கீர்த்தி சுரேஷ், சமீபத்தில் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தாலி இல்லாமல் கலந்து கொண்டதும் அதிகம் பேசப்பட்டது. இதைத் தொடர்ந்து கீர்த்தி சுரேஷ். திருமணத்திற்கு பின்னர், எந்த படத்திலும் கமிட் ஆகாமல் இருக்கும் கீர்த்தி சுரேஷ் திரையுலகை விட்டு விலகுகிறாரா? என்கிற கேள்வி ஒருபுறம் எழுந்து கொண்டிருக்கும் நிலையில், அண்மையில் 'அக்கா' என்கிற வெப் சீரிஸிலும் கீர்த்தி சுரேஷ் மிகவும் கோல்டாக நடித்திருந்த காட்சிகள் வெளியாகி நல்ல வரவைப்பை பெற்றது.
44
முதலீட்டார்களாக மாறிய கீர்த்தி சுரேஷ்:
இதைத் தொடர்ந்து தற்போது கீர்த்தி சுரேஷ் சின்ன திரைக்கு தாவியுள்ளார். 'ஸ்டார்ட்டப் சிங்கம்' என விஜய் டிவியில் துவங்கப்பட்டுள்ள நிகழ்ச்சியில் தான் கீர்த்தி சுரேஷ் முதலீட்டார்களாக களமிறங்கி உள்ளார். இது முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் உருவாக்கியுள்ள நிகழ்ச்சி ஆகும். இதில் தங்களின் கண்டுபிடிப்புகள் மற்றும் வித்தியாசமான பொருட்கள் பற்றி விவரித்து அதன் மூலம் முதலீட்டாளர்களை ஈர்க்க முடியும். ஹிந்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த நிகழ்ச்சியை, தற்போது தமிழிலும் விஜய் டிவியில் துவங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் 5 முதலீட்டாளர்களில் ஒருவராக கீர்த்தி சுரேஷும் இடம் பெற்றுள்ளார். ஆனால் இந்த வாரம் மட்டுமே இவர் பங்கேற்பாரா? அல்லது வாரந்தோறும் இவரின் வருகை இருக்குமா என்பது தெரியவில்லை. இதுகுறித்த ப்ரோமோ தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.