சம்பள விஷயத்தில் 3 ஹீரோக்களுக்கு செக் வைத்த டான்! புது ரூட்டில் அதிரடி காட்டும் ஆகாஷ் பாஸ்கரன்!

Published : Feb 23, 2025, 02:21 PM IST

பெரிய நடிகர்கள் தங்களின் சம்பளத்தை, பல மடங்கு உயர்த்தும் நிலையில், தற்போது டான் பிச்சர்ஸ் மூலம் திரையுலகில் தயாரிப்பாளராக கால் பதித்துள்ள ஆகாஷ் பாஸ்கரன் புது ரூட்டில் நடிகர்களை அணுகி வருகிறார். அது பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.  

PREV
16
சம்பள விஷயத்தில் 3 ஹீரோக்களுக்கு செக் வைத்த டான்! புது ரூட்டில் அதிரடி காட்டும் ஆகாஷ் பாஸ்கரன்!
200 கோடியை எட்டிய விஜய்

விஜய், அஜித், ரஜினி, கமல் ஆகியோர் தாங்கள் நடிக்கும் படங்களுக்கு ரூ.100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கி வருகிறார்கள். தளபதி விஜய், கோட்' படத்திற்கு ரூ.200 கோடி சம்பளம் வாங்கிய நிலையில், தற்போது நடித்து வரும் ஜனநாயகன் படத்திற்கு ரூ.250 கோடி வரை சம்பளமாக வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

26
50 கோடிக்கு மேல் சம்பளம் கேட்கும் நடிகர்கள்

இவர்களுக்கு அடுத்ததாக இருக்க கூடிய , சூர்யா, விக்ரம், தனுஷ், சிவகார்த்திகேயன், சிம்பு, கார்த்தி, போன்ற முன்னணி நடிகர்கள், 30 முதல் 50 கோடிக்கு மேல் சம்பளம் கேட்கிறார்கள். தயாரிப்பாளர்களும் இவர்கள் கேட்கும் சம்பளத்தை எந்த ஒரு மறுப்பும் இல்லாமல் கொடுக்கிறார்கள். அதே சமயம் நடிகர்களின் சம்பளம் தான் படத்தின் பட்ஜெட் அதிகரிக்க காரணம் என்கிற குற்றச்சாட்டையும் தயாரிப்பாளர்கள் வைத்துள்ளனர். அதே போல் நடிகைகளும் தங்களின் இஷ்டத்துக்கு ஒவ்வொரு படத்திற்கும் சம்பளத்தை உயர்த்தி கொண்டே செல்கிறார்கள்.

தனுஷ்ஷின் ரோலக்ஸ் வாட்ச் விலை இத்தன கோடியா? 2 BHK வீடே வாங்கலாம் போல!!
 

36
ஏமாற்றத்தை கொடுத்த படங்கள்

இது இப்படி இருக்க, அமரன் போன்ற படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி அடைந்து தயாரிப்பாளர்களுக்கு நல்ல லாபத்தை பெற்று தந்தாலும், கங்குவா, தங்கலான், கேம் சேஞ்சர் போல் சில படங்கள் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆனாலும் ஏமாற்றத்தை கொடுக்கிறது. இதில் நடிக்கும் நடிகர்கள் சம்பளத்தை பெற்று, தோல்வியை கண்டு கொள்ளாமல் அடுத்த படத்தில் நடிக்க போய்விட்டாலும், இதில் மிகப்பெரிய சேதாரத்தை சந்திப்பது தயாரிப்பாளர்கள் மட்டுமே.
 

46
ஆகாஷ் பாஸ்கரன் புதிய ரூட்:

இது போன்ற சில பிரச்சனைகளை சரி செய்யவே இப்போது டான் பிச்சர்ஸ் நிறுவனர், ஆகாஷ் பாஸ்கரன் புதிய ரூட்டை கையில் எடுத்துள்ளார். அதாவது படத்தின் லாபத்தில் பங்கு கொடுக்கும் முறை. நடிகர் ரஜினிகாந்த் மட்டுமே படத்தில் லாபத்தில் பங்கு வாங்கும் முறையை கையாண்டு வந்த நிலையில், தற்போது இந்த முறையில் தான் ஆகாஷ் பாஸ்கரன் பெரிய நடிகர்களை வைத்து எடுக்கப்படும் படங்களுக்கு அறிமுகப்படுத்தி உள்ளார்.

தனுஷை அசிங்கப்படுத்த நீலாம்பரியாக மாறி; கல்யாண வீட்டில் நயன்தாரா செய்த கலாட்டா!
 

56
3 டாப் ஹீரோஸ் படம்:

சிவகார்த்திகேயனை வைத்து இயக்கி வரும் பராசக்தி, சிம்புவின் 51-ஆவது படம் மற்றும் தனுஷ் நடிக்கும் இட்லி கடை போன்ற புதிய படத்திற்கு நடிகர்களுக்கு குறைந்த அளவில் மட்டுமே சம்பளமாக கொடுத்து விட்டு, படம் ரிலீஸ் ஆனா பின்னர், அதில் வரும் லாபம் மற்றும் நஷ்டம் எதுவாக இருந்தாலும் இதில் நடிகர்களுக்கும் பங்கு உண்டு. ஒருவேளை நடிகர்கள் நடிக்கும் படங்கள் 300 கோடி... 400 கோடி வசூல் செய்தால், ஒரு படத்திற்கு இவர்கள் வாங்கும் சம்பளத்தை விட 2 மடங்கு சம்பளம் பெரும் வாய்ப்பும் உள்ளது.

66
டான் பிச்சர்ஸ் நிறுவனத்தின் இந்த புது பிளான்

லாபத்தில் பங்கு என்பதால்... தயாரிப்பாளரை மட்டும் அல்ல தங்களுக்காகவும் நடிகர்கள் படத்தை வெற்றிப்படமாக கொடுத்தே ஆக வேண்டும் என்கிற கட்டாயத்தில் உள்ளனர். அதே போல், டான் பிச்சர்ஸ் நிறுவனத்தின் இந்த புது பிளான் எப்படி ஒர்க் அவுட் ஆகும் என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்.

யார் இந்த இட்லி கடை தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன்?

click me!

Recommended Stories